பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்' என்ற குறட்பா வுடன் மூன்றாம் குறட்பா ஒப்பிட்டுக் கருதற்பாலது. ஐந்தாம் பாடலில், மலர்தல் - கூம்பல் என்பவை நுண்ணிய கருத்தினைப் புலப்படுத்துகின்றன. பின்னால் நடப்பதை முன்னால் அறிதல் அறிவுடையார்க்கேயாகும் என்பதனை ஏழாம் குறட்பா சிறப்பாக உணர்த்துகிறது. என்றுமே அதிர்ச்சிக் தரக் கூடிய துன்பம் அறிவுடையவர்களுக்கு வரவே வராது. பத்தாம் குறட்பாவில் எல்லாம்' என்று கூறி பொருள் பொதிந்த உண்மை விளக்கம் செய்யப் பட்டு விட்டது. - 44. குற்றம் கடிதல் காமம், வெகுளி, கஞ்சத்தனம், மானம், உவகை, மதம் என்று குற்றங்கள் பலவகைகளாகக் கூறப்படும், இவைகள் வாராமல் பார்த்துக் கொள்ளவேண்டும், சிறப்பாக அரசனுக்கு இவைகள் கூறப்படுவதால், குறட்பாக்களில், ஏதம்இறைக்கு, என் குற்றம் ஆகும் இறைக்கு, என்பன காணப்படுகின்றன. பொதுவாக அனைவர்க்கும் இருக்க வேண்டிய நன்னெறிகளில் இதுவும் ஒன்றாகும். கடிதல்' என்று இந்த ஒரு அதிகாரம்தான் முடிகின்றது. முதலிரண்டு குறட்பாக்களும் குற்றங்களாவன இவை யென்று கூறுகின்றன. மூன்று முதல் ஆறுவரையுள்ள பாடல்கள் குற்றங்களைக் கடிந்து நீக்க வேண்டியதைப் பொது வகையால் கூறுகின்றன. ஏழாம் பாடலும், எட்டாம் பாடலும் உலோபம்' என்று கூறப்படுகின்ற கஞ்சத்தனத் தின் தீமையினைக் குறிக்கின்றன. ஒன்பதாம் பாடல் மதங் கொண்ட குற்றத்தினைக் கூறும். தான் விரும்புகின்ற பொருளினைப் பிறரறியாமல் இருப்பவர்களைப் பகைவர்கள் வெல்ல முடியாதென்று பத்தாம் பாடல் எடுத்துக் காட்டு கிறது. ஆ. வி.-5