பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of ty இவருக்கு இப்பொருளின் மீது மிக்க விருப்பம் என்று பகைவர்கள் தெரிந்து கொண்டால் அதன் வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் என்னும் கருத்தினைப் பத்தாம் பாடல் துட்பமாகக் கூறிற்று. இந்த அதிகாரத்தில்வரும் சொற்களில் சில வெகுளாமை, மானம், நாணுடைமை, நன்றியில் செல்வம் முதலிய அதிகா ரங்களை நினைவு படுபடுத்துவனவாக உள்ளன. பத்தாம் பாடலில் நூல் என்பது வஞ்சித்தற்கு என்னும் எண்னத்தி னைக் குறித்தது. ஐந்தாம் பாடல் வைத்துiறு' என்று (வைக்கோல்) என்று குறித்துக் காட்டி உண்மையினைப் புலப்படுத்துகிறது, மன்றாம் பாடலில் தினை, பனை, என்பன சிறியது, பெரியது என்பதைக் காட்டும் அளவை களாகும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பு இறந்த மானம், மாணா உவகை, பற்றுள்ளம், தன்னை, வியத்தல் முதலியனவெல்லாம் கொடி.ய திய குற்றங் களாகக் கருதப்படல் வேண்டும். 45. பெரியாரைத் துணைக்கோடல் தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறி வுடையாரை அரசன் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். பேரறிவுடைய அமைச்சர்களும், நீதிநூல் கம்.) சான்றோர்களும் பெரியார்கள் என்ற கருத்தில் வைக்கப் படுவர். சிறப்பாக அரசனுக்குக் கூறப்படுவதால் இந்த அதிகாரத்தின் குறட்பாக்களில் மன்னன் என்ற சொல் காணப்படுகிறது. பொதுத்தன்மையில் பலருக்கும் உரிய தாகும். 'பெரியாரைப் பிழையாமை' என்றொரு அதிகாரம் உண்டு. அது பல்லாற்றாலும் ஆற்றலும், வன்மை யும் கொண்டவர்களைக் கூறும். துணை' என்ற சொல், வாழ்க்கைத் துணைநலம் என்பதிலும் காணப்படுகிறது.