பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நிலத்தினியல்பால் கெட்டுவிடுவதுபோல, சிறிய இனம் நல்லவர்களைக் கெடுத்துவிடும் என்று எடுத்துக் காட்டுகிறது மனம் மக்களின் பொது உணர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருப்பதாகும். அதுவேபோல, இவன் இத்தன் மையன்" என்று சொல்லப்படும் சொல் இனம் காரணமாகத் தான் அமையும் என்பதனை மூன்றாம் குறட்பா கூறு கின்றது. மனத்து உளது போலக் காட்டி" என்று நான்காம் பாடலில் கூறப்பட்டிருப்பது மிகவும் சிந்தனைக்குரியதாகும். ஐந்து முதல் ஒன்பதாவது பாடல்வரை சிற்றினம் சேராமை யின் சிறப்பு கூறப்பட்டது. சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - இனத்தியல்பது ஆகும் அறிவு - இனத்து உளது ஆகும் அறிவு - தீயினத்தின் அல்லல் - என்பனவெல்லாம் இனம் ஒருவனுக்கு எத்தகைய அறிவினை உண்டாக்கி விடும் என்ற உண்மையினைக் குறிக்கின்றன. எல்லாப் புகழும் தரும்" என்று ஏழாம் பாடல் விளக்கம் செய்கின்றது. நல்ல மனம் படைத்த சான்றோர்களுக்கும் நல்லினம் சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்று எட்டாம்பாடல் தெளிவாக்குகின்றது. பெருமை, அறிவு, சொல், எச்சம், ஆக்கம், புகழ், சான்றோர், ஏமாப்பு, துணை, அல்லல் முதலிய சொற்கள் குறட்பாக்களின் கருத்துக்களை நினைவுபடுத்த உதவுவன வாகும். 47. தெரிந்து செயல்வகை அரசன் தான் செய்யும் தொழில்களை ஆராய்ந்து செய்யும் திறத்தினைக் கூறுவதாகும். தக்கவர்களை துணைக்கொண்டு செய்யப்படவேண்டும் என்பதாகும். அரசியலில் கூறப்பட்டு அரசனுக்கென்று சிறப்பாக கூறப் பட்டாலும், பொதுவகையான் அனைவருக்கும் அறிவுறுத்து வனவும் உண்டு. .