பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 செயல் செய்பவன் தானே நேரில் நின்று பொறுப்பேற்று நடத்துவதை இவ்வதிகாரம் கூறுகின்றது. தெரிந்து வினை யாடல்' என்றொரு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரம், தொழிலினைப் பொறுப்புள்ளவர்களிடம் ஒப்படைத்து அத்தொழிலின் பொறுப்பினை ஏற்றவர்களை எவ்வாறு நடத்துதல் வேண்டும் என்று கூறுவதாகும். வினை மேற் கொண்டவர்களை நடத்தும் முறையினை அவ்வதிகாரம்

கூறும். தெரிந்து தெளிதல்" என்றொரு அதிகாரம் உண்டு. சிறந்தவர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை கூறுவதாகும். "பகைத்திறம் தெரிதல்' என்றொரு அதிகாரம் உண்டு. இவ்வதிகாரம், செயல்வகை என்று முடிவதைப் போலவே, வினை செயல் வகை, பொருள் செயல்வகை, குடி செயல்வகை என்ற அதிகாரங்களும் முடிகின்றன. விளக்கங்கள் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. -- தெரிந்து செயல்வகை என்ற இந்த அதிகாரத்தின் முதலிரண்டு குறட்பாக்களும், செய்யத்தகும் வினைகளை யும் அவைகளைச் செய்யும் வகைகளையும் விளக்குகின்றன. மூன்று,நான்கு, ஐந்து ஆகிய மூன்று பாடல்களும் விலக்கப்பட வேண்டிய வினைகளையும் அவைகளை விலக்காவிட்டால் வரும் குற்றங்களையும் குறிக்கின்றன. ஆறாம் பாடல் செய்வன செய்து, ஒழிவன ஒழிக. என்று இருவகையினையும் கூறும். ஏழு முதல் பத்தாம் பாடல்வரை வினைகள் செய்வதற்குரிய வழியினையும் அதனது உரிமையினையும் தெளிவுபடுத்துகின்றன. அவரவர் பண்பு அறிந்து' என்று கூறுகின்ற ஒன்பதாம் குறட்பா சிறந்தவொரு பேருண்மையினைப் புலப்படுத்து கிறது. ஐந்தாம் குறட்பா, வளரும் நிலத்திலே பகைவர்களை