பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 திருந்தால் வரும் குற்றத்தினைக் கூறுகின்றது. ஏழாம்பாடல் முதல் பத்தாம் பாடல்வரை, மூவகை ஆற்றலுள்ளும் பொருள்-செல்வத்தின் வலிமையினையறிந்து செயல்பட வேண்டிய சிறப்பினை வகுத்துக் கூறுகின்றன. மயிலிறகினை ஏற்றிச் செல்லும் காட்சியினை ஐந்தாம் பாடலும், துணிக்கொம்பர் ஏறினார் என்று ஆறாம் பாடலும் சுட்டிக்காட்டுவது மிகவும் நுட்பமான கருத்தினை விளக்கம் செய்கின்றன. அளவறிந்து சக-போகுஆறு அகலாக்கடைவாழாதான் வாழ்க்கை உளவரை தூக்காத-என்று குறித்துக் காட்டப் பட்டுள்ளவை பொருளினை எவ்வாறு போற்றுதல்வேண்டும் என்பதனை அறிவறுத்துகிறன. அறிவுடைமை, ஊக்க முடைமை, பொருள்செயல்வகை, ஈகை, ஒப்புரவு அறிதன் முதலிய அதிகாரங்களைச் சிந்தித்தல் வேண்டும். 49. காலம் அறிதல் அரசனுக்குப் போர் செய்தல் இன்றியமையாச் செயலாக இருத்தல் கூடும். மக்களைக் காப்பாற்றும் தலைவன் அவனே யாவான். எனவே முதன்மையான கருத்தாக போர் செய்யும் பற்பல ஆற்றல்களையும் அவன் பெற்றிருத்தலும் அறிந்திருத்தலும் வேண்டும். பொருட்பாலில் பெரும்பகுதி இக்கருத்தினையே உணர்த்துகிறது என்பது மிகையாகாது. வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் என்பன வெல்லாம் அக்கருத்தினைத் தலையாகக் கொண்டவைகளே யாகும். சிறப்புப் பகுதியாக அரசனுக்குக் கூறப்பட்டாலும் வாழும் மக்களுக்கும் வழியுணர்த்தும் உண்மைகளும் கூறப் பட்டுள்ளனவாகும் என்று அறிதல் வேண்டும். முதற்குறட்பா காலத்தினால் வரும் பெரும் வெற்றி யினைக் கூறுகிறது. காலத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது. வேந்தர்க்குக் காலம் மிகவும் இன்றியமையாததாகும். பல ம் வாய்ந்த சுகையினைக் காலத்தின் உதவியினால் காக்கை