பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வெல்லும், கடல் ஒடும் எண்ணி இடத்தாற் செயின், செல் இடம் சேரின், உறை நிலத்தோடு ஒட்டல், நரி அடும்-என்று காட்டப்பட்டவைகள் எல்லாம் தக்க இடத்தினால் வெற்றி தோல்விகள் அமையும் என்பதனை உணர்த்துகின்றன. முதலை, நெடுந்தேர், நாவாய், களர், நரி, களிறு முதலியன வும் பிறவும் குறிப்புணர்த்தும் அரிய குறட்பாக்களைக் காட்டுவனவாகும். 51. தெரிந்து தெளிதல் அமைச்சர் முதலாயினோரைத் தேர்ந்தெடுக்கும் முறை களைக் கூறுவதாகும். உயர்ந்த பொறுப்பான பணிகளில் அமைக்கப்பட வேண்டியவர்களுடைய குணம், பரம்பரையின் இயல்பு, கல்வி, அறிவு முதலியவற்றை அறிந்து தெரிந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாகும். தெரிந்து வினை யாடல், தெரிந்து செயல் வகை, பகைத்திறம் தெரிதல் முதலிய அதிகாரங்களிலும் தெரிதல் என்ற சொல் காணப்படுகின்றது. அரிய வேண்டிய அளவைகளைக் கொண்டு குணமும், குற்றமும் தெரிந்து குணமுடையாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதல் மூன்று பாடல்களும் கூறுகின்றன. நான்காம் ஐந்தாம் பாடல்கள் குணம், குற்றங்களை நாடி யறியும் வழிமுறைகளை தெளிவு படுத்துகின்றன. ஆறுமுதல் பத்தாம் பாடல்வரை யாரைத் தெளிந்து தேர்ந்தெடுக்க கூடாதென்றும், அப்படி தேர்ந்தெடுத்தால் வரும் குற்றங் களும் கூறப்பட்டன. அறம், பொருள், இன்பம், கல்வி, குடி, குற்றம், நாணம், இனம், பெருமை, சிறுமை, அறிவு, பேதைமை, இடும்பை முதலியனவாக இவ்வதிகாரத்தில் காணப்படும் சொற்கள் பிற அதிகாரங்களையும் நினைவுபடுத்துவனவாக அமைந் துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவனுடைய மன