பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இருப்பவர் தேர்ந்தெடுக்கும் பொறுப்புள்ளவர்கள் ஆனபடி யால் அவர்களுக்குக் கூறப்பட்ட கருத்துக்களேயானாலும் பொது வாழ்க்கையறிவுக்குப் பலரும் அறிய இயல்பினைக் கூறுகின்றது. 52. தெரிந்து வினையாடல் பொறுப்பான வினைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர் களிடம் ஒப்படைத்து, தான் அவர்களை ஆளுதல் என்பது எவ்வாறு என்பதனை இந்த அதிகாரம் கூறுகின்றது. குறிப்பாக அரசனுக்கும் சிறப்பாகத் தலைமை தாங்கும் அனைவர்க்கும் கூறப்பட்ட தென்றாலும் பலருக்கும் அறிவுறுத்தும் உண்மைகள் காணப்படுகின்றன என்றே கொள்ளுதல் வேண்டும். தெரிந்து வினையாடல்’ என்ற இந்த அதிகாரத்துடன், தெரிந்துசெயல்வகை, வினைத் தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை முதலிய அதிகாரங்களும் ஒப்பு நோக்குற்குரியன. முதன் மூன்று குறட்பாக்களும் ஆளப்படுவானது. அதாவது - தலைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு ஏற்றவனுடைய - இலக்கணத்தினைக் கூறுகின்றன. நான்காம் குறட்பா, ஒரு வகையால் ஒழிக்கப் பட வேண்டியவர்கள் யாவர் என்பதனைக் குறிக்கின்றது. ஆறுமுதல் ஒன்பது பாடல்வரை, ஆளப்படுபவனை ஆளு கின்றதலைவன் எவ்வாறு ஆளுதல் வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. வினை செய்பவர்களை நாள் தோறும் கண்டு வருக என்றும் அவ்வினை செய்வான் மனம் கோணாதிருந்தால் உலகம் கோணாமல் நடந்து வரும் என்றும், பத்தாம் பாடல் தெளிவுபடுத்தும். தொழிலாளர் களின் வன்மையினை பத்தாம் பாடல் நன்கு உணர்த்தி விட்டது. தொழிலில் வைத்த பிறகு முற்றிலும் மாறாகி விடுபவர் களை நான்காம் பாடல் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.வினை