பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8; யினை ஆற்றல் நிறைந்தவனிடத்தில் தான் ஒப்படைக்க வேண்டுமேயல்லாமல், இவன் எனக்கு மிகவும் வேண்டிய வன்' என்று யாரிடமும் ஒப்படைக்க கூடாதென்பதனை ஐந்தாம் பாடல் கூறும். ஒரு வேலையினை ஒருவனிடத்தில் - தக்கவனிடத்தில் ஒப்படைத்த பிறகு - இடையே அவனுக்குத் தொல்லை தருவதும், ஐயப்படுவதும் கூடாதென்பதனை எட்டாம் பாடல் எடுத்துக் கூறுகின்றது. நலம் புரிந்த தன்மையான், ஆராய்வான், நன்குடையான், என்பனவெல்லாம் வினை யினைச் செய்பவன் பால் காணப்படவேண்டிய நற்குணங் களைக் கூறுகின்றன. நாள்தோறும் நாடுக” என்று கூறும் பத்தாம் பாடல் பன்முறை சிந்திக்கத் தக்கதாகும். 53. சுற்றம் தழால் அரசன் தன்னைச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தார்களை நீங்காமல் அணைத்துக் கொண்டு நடத்தல் வேண்டும் என்ப தாகும். சுற்றத்தார் என்பது உறவினர்களை மட்டும் என்று கொள்ளுதலாகாது. தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் என்பது தான் சிறப்பான பொருளாகும். இவ்வதிகாரக் குறட்பாக் களில், வேந்தன் என்று குறிக்கப்பட்டு, மன்னனுக்கே பெரிதும் கூறப்பட்டாலும் உலகோர் அனைவருக்குமே உரித்தான கருத்துரைகள் காணப்படுகின்றன என்று அறிதல் வேண்டும் - தேழால்’ என்பது தழுவுதல் என்பதாகும். சுற்றத்தார். களுடைய சிறப்பினை முதற் குறட்பா விளக்குகின்றது. சுற்றம் தழுவுதல் செல்வத்திற்குக் காரணமாகவும் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று இரண்டு முதல் நான்கு பாடல்கள் கூறுகின்றன, ஐந்து முதல் எட்டு பாடல்கள் வரை, சுற்றம் தழுவும்வழிமுறைகள் கூறப்பட்டன.