பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பிரிந்துபோன சுற்றத்தார்களில், தீமை செய்யப்போய் அதனை நீக்கி வருவானும் அது செய்யாமற் போய்ப் பின் நன்மை செய்ய வருவானும், தழுவப்பட வேண்டியவர்கள் ஆனபடியால், தழுவுகின்ற முறைகளைக் கடைசி இரண்டு குறட்பாக்களும் தெளிவாக்குகின்றன. காரணத்தின் வந்தார்” என்பது சிந்திக்கத்தக்கது. கரையின்றி நீர் நிறைந்த குளத்தினைக் காட்டி சுற்றத் தாரின் பெருஞ்சிறப்பினைக் காட்டும் மூன்றாவது குறட்பா ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். ஏழாம்பாடல் காக்கை யினைக் குறித்துக்காட்டி உண்மையினைப் புலப்படுத்து கிறது. அன்ன நீரார்' என்பது சிறப்பாக அமைந்துள்ளது. பழமை, பாராட்டுதல், விருப்பு அறாச்சுற்றம் சுற்றப்பட ஒழுகல், சுற்றத்தால் சுற்றப்படும், அன்ன நீரார்க்கே உள, என்று காணப்படுவனவெல்லாம் சுற்றத்தார்களின் பெருஞ் சிறப்பினையும் பயனையும் குறிக்கின்றன. செல்வம் பெற்றதன் பயனைக் குறித்துக் காட்டி பெற்றதால் பெற்றபயன், கொடுத்தலும் இன்சொலும், பெருங் கொடையான், என்ற அரிய உண்மைகளையெல்லாம் நான்கு, ஐந்து ஆறுபாடல்கள் வலியுறுத்திச் சொல்கின்றன, தகுதிக்கு ஏற்ப நோக்கவேண்டும் என்று அறிவுறுத்துவது எட்டாம் பாடலாகும். எல்லோரையும் ஒரே தன்மையில் நோக்குதல் செய்யாமல் தகுதிக்கேற்ப நோக்குதல் சுற்றம் தன்னைவிடாமல் தழுவுவதற்கு சிறப்பாக அமையும் என்பதே எட்டாம் பாடல் உணர்த்தும் உண்மையாகும், 54. பொச்சாவாமை உருவும், திருவும் ஆற்றலும் முதலியவற்றால் மகிழ்ந்து தற்காத்தலிலும் பகை அழித்தல் முதலிய காரியங்களிலும் சோர்தலைச் செய்யாமையாகும். சோர்ந்திருத்தல் கூடாது. அதாவது மறதி என்பது கூடாதென்பதாம். மடியின்மை' என்ற அதிகாரத்துடன் ஒப்பிட்டு நோக்குதல் நல்லது.