பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 முதல் இரண்டு பாடல்களும் பொச்சாப்பினது குற்றத் தினைக் கூறுகின்றன. மூன்று நான்கு, ஐந்து பாடல்கள் பொச்சாப்பு உடையார்க்கு வரும் தீமையினைத் தெளிவு படுத்துகின்றன. பொச்சாப்பு இல்லாமையினது சிறப்பினை ஆறு ஏழு பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. எட்டாம் பாடல் பொச்சாப்புக் கொள்ளாமல் செய்ய வேண்டுவன வற்றைக் கூறும். ஒன்பது பத்துப்பாடல்கள் பொச்சாப்பு இல்லாமல் இருப்பதற்கு வழிமுறைகளைத் தெளிவுபடுத்து கின்றன. . வெகுளாமை, புகழ், அறிவுடைமை, அரண் முதலிய அதிகாரங்களை முதல் நான்கு குறட்பாக்களும் நினைவு படுத்துகின்றன. வெகுளி ஒருவழியில் பகைவர்களைக் கொல்லுதலும் உண்டு. ஆனால் பொச்சாப்பு என்பது தன்னையே கொல்லும். இவ்வுண்மையினை முதற்குறட்பா காட்டுகிறது. அறிவினைக் கெடுப்பது எது என்பதை இரண்டாம் பாடல் கூறும். அரண்' என்பது அச்சமென்பது சிறிதும் இல்லாதவர்களுக்கே பயன்படும் என்பது நான்காம் பாடலின் கருத்தாகும். எல்லோரையும் எக்காலத்திலும் நினைவில் வைத் துக் கொண்டிருப்பதே பெரும் நன்மை யினைப் பயக்கும் என்ற உண்மை ஆறாம் பாடலால் அறியப்படுகின்றது. - உவகை மகிழ்ச்சியில் ேச ர் வு . பொச்சாப்புக் கொல்லும் புகழை - பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை ஆங்கு இல்லை பொச்சாப்புடையார்க்கு நன்கு - காவாது இழுக்கியான் - இழுக்காமை யார்மாட்டும் - அரியவென்று ஆகாததில்லை புகழ்ந்தவை போற்றிச் செயல் - இகழ்ச் சியின் கெட்டாரை உள்ளுக - உள்ளியது எய்தல் எளிது. என்பனவெல்லாம் பொச்சாப்பு என்பதனை நீக்கவேண்டும் என்பதனையும் பொச்சாப்பு இல்லாதார் எய்தும் சிறப் பினையும் தெளிவுபடுத்துவனவாகும்.