பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 55. செங்கோன்மை அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை, ஆட்சித் தலைமையில் இருப்பவர்களுக்கு உரியது என்பதாம். எப்பக்கமும் சாயாமல் செவ்வியகோல் போல் இருப்பதால் செங்கோல் எனப்பட்டது. முதற் குறட்பா செங்கோவின் இலக்கணம் இன்னதென்று கூறுகின்றது. இரண்டாம் குறட் பாவும் மூன்றும் செங்கோவினுடைய சிறப்பினைக் கூறு கின்றன. நான்கு முதல் ஏழாம்பாடல் வரை, செங்கோ வினைச் செலுத்துகிறவன் அடையும் பயன் கூறப்பட்டது. எட்டாம் பாடல் முறை செலுத்தாதவனுடைய கேட்டி னைக் கூறும், ஒன்பதாம் பத்தாம் பாடல்கள் செங்கோல் செலுத்தும் வேந்தன் தீயவர்களைத் தண்டித்து ஆட்சி செய்யவேண்டுமென்பதை தெளிவுடுத்துகின்றன. மிகச் சிறந்த நுண்பொருள்களை இந்த அதிகாரம் கூறு கின்றது. முதற் குறட்பாவில் கண்ணோட்டம்' என்ற அதிகாரத்தின் குறிப்பு அறிவிக்கப்படுகிறது. நான்கு முறைகளைத் தெளிவுபடுத்துவது முதலாவது குறட்பா வாகும். இரண்டாம் குறட்பா மழையின் இன்றியமையாத் தன்மையினைச் சுட்டிக் காட்டி செங்கோவின் அரும் பெரும் கருத்தினை மெய்ப்பிக்கின்றது. அறவழிநிற்கும் அந்தணர் கூறும் மறைநூலுக்கும் அறத்திற்கும் ஆதிமூலமாக இருப்பது மன்னவன் கோல் என்பதனை மூன்றாம் குறட்பா கூறுவ தாகும். ஆதியாய் என்பது காரணமாய் என்று பொருள் படுவதாகும் 'ஆதி' என்ற சொல் ஆதிபகவன்' என்ற இடத்திலும் இந்தக் குறட்பாவிலுமே காணப்படுகிறது. நூலில் வேறு எங்கும் இச்சொல் காணப்படவில்லை. குடிமக்களைத் தழுவிய ஆட்சியினை நான்காம்குறட்பா விளக்கம் செய்கின்றது. மன்னன் விருப்பப்படி மக்கள் நடத்தல் வேண்டும் என்பது கருத்தாகக் கூறப்படவில்லை.