பக்கம்:திருக்குறள் உரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 336. நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. நேற்றிருந்த ஒருவன் இன்றில்லை என்று சொல்லக்கூடிய பெருமை உடையது இந்த உலகம். * * * s உலகத்தில் பிறந்தார் இறந்து போன பின்னும் உலகம் அழியாமல் இருப்பதால் உலகத்திற்குப் பெருமை என்றார். 336. 337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. அடுத்து வரும் ஒருநொடிப் பொழுதேனும் வாழ்தலை உறுதியாக அறிய இயலாத மாந்தர் பல கோடி எண்ணங்களை எண்ணுவர். வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதை மதித்துப் பொருள் உடையதாக்கும் திறனில்லாதவர்கள் இந்நொடியை வறிதே கழியவிட்டு அடுத்து வரும் நொடிகளுக்கு கோடிக் கணக்கில் எண்ணமிடுவர். நிகழ்காலத்தை முறையாகப் பயன்படுத்தாதவர் எதிர்காலத்திற்குத் திட்டமிடுதல் பயனற்றது. முறையான நிகழ்காலத்தில் சிறப்பான எதிர்காலம் உருவாகும். 337. 338. குடம்பை தனித்துஒழிய புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு. முட்டை தனித்துக் கிடக்க அதனுள் இருந்த குஞ்சு தனியே போனது போன்றது, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு. உயிர் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் அளவினதே உடல் என்பது கருதது. குடம்பை என்பதற்குக் கூடு என்று பொருள் கொள்வாருமுளர். குஞ்சு பொரித்த பிறகு முட்டை உருவம் அழிகிறது. அதுபோல் உயிரைப்பிரிந்த உடம்பும் அழிகிறது. பறவை பிரிந்து போன கூட்டுக்கு அழிவில்லை. பிறிதொரு பறவையும் அந்தக் கூட்டில் வந்து தங்கலாம். ஆதலால் பறவைக் கூடு என்பதை விட முட்டை என்பதே பொருந்தும். 338. 339. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை ஒத்தது. மீண்டும் அவன் பிறத்தல் உறங்கி விழித்தலை ஒத்தது. இத்திருக்குறள் திருவள்ளுவருக்குப் பல பிறப்புக்களில் நம்பிக்கையுண்டு என்பதற்குச் சான்று. இறத்தலும் பிறத்தலும் தண்டனையன்று. உயிர் நிறை நலம் பெறும் 98 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை