பக்கம்:திருக்குறள் உரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. என்றது. o திருவள்ளுவரும் இல்லறம் சொல்லிய பிறகே துறவறடி கூறியிருப்பதால் தொல்காப்பியம் கூறும் துறவே, திருவள்ளுவர் கூறும் துறவு எனக் கொள்ளுதல் தவறன்று. 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்குகிறானோ அந்தப் பொருளால் அந்தப் பொருளால் துன்பம் எய்துதல் 606T. இ துறக்க வேண்டியன பல. அவற்றையெல்லாம் ஒருசேரத் துறத்தல் இயலாதாயினும், ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அந்த அளவுக்குத்துன்பம் குறையும் என்பது கருத்து. இது படிமுறையால் துறவு மனப்பான்மையை அடைய வழிகாட்டும் குறள். 341. 342. வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. இணையில் இன்பம் வேண்டின் அது உண்டாகத் துறந்திடுக! அங்ங்ணம் துறந்தபின் உன்னை வந்து அடையக்கூடியன பல. துறந்தார், வெறும் ஆசைகளால் அலைக்கழிக்கப் பெறாதிருத்தலால் பல செல்வங்களை அடைவர். செல்வத்தின் பயன் அடைய வேண்டும் என்ற ஆர்வம் உடையவர் கொண்டு வந்து சேர்ப்பர். 342. 343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடவேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. ஐம்பொறிகளின் நுகர்வுக்குரிய புலன்களையும் தூய்மையுடையனவாகச் சமைத்தல் - பக்குவப்படுத்தல் வேண்டும். வேண்டும் என்பனவற்றையெல்லாம் ஒருங்கே விடுதல் வேண்டும். புலன்களின் இயக்கம் பொறிகளின் வழியது மிருக நிலை; பொறிகளின் இயக்கம் புலன்களின் வழியது - மானிட நிலை. புலன்களிலும் அழுக்கற்ற நிலை- இறைநிலை, அருள்நிலை. புலன்களின் நுகர்வுகளை அறிவு, அன்பு, அருள் என்றமைத்தால் பொறிகளின் இயக்கம் துாய்மைப்படும். பொறிகள் புறத்தே செல்லாது அகநிலையிலேயே நுகர்வுகள் பெற்று அமைதி பெறும். ‘விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு' என்றது f00 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை