பக்கம்:திருக்குறள் உரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆசையால் வேண்டுவன ஆக்கிக் கொண்டவைகளை - தேவைகளை விட வேண்டும் என்பது கருத்து. தேவை வேறு; வேண்டுவன வேறு. 343. 344. இயல்பாகும் நோன்பிற்குஎன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. ஒரு பொருளையும் பற்றாகக் கொள்ளாமை தவத்திற்கு இயல்பு, அஃதன்றி ஒர் உடைமையிடத்துப் பற்றிருந்தாலும், அப்பற்று தவத்தைப் போக்கி விடும். அவ்வழி மயக்கமும் பொருந்தக் காரணம் ஆகும். 'பற்று ’’ என்பது, ஒருபொருளைப் பயன் கருதியதாக எண்ணாமல் பொருளைப் பொருளுக்காகவே விரும்புதல். பற்று என்பதாவது , ஒருபொருள் தவிர்க்க இயலாதது என்ற கருத்துக் கொண்டு பெறவிழைதலும், பெற்றபின் இழக்க நுகர்வு வழியில் கூட) விரும்பாமையும் ஆகும். மயக்கம் - எது நிலையானது என்ற கருத்தில் துணிவின்மை. எந்த ஓர் உடைமையும் தனித்து நில்லாது. அதனைத் தொடர்ந்து பல தேவைப்படும். அதனால் ஒரு சிறு உடைமைப் பற்றுக்கூட மனிதனைப் பேராசைக்காரனாக்கி விடும். இது துறவுக்குப் பொருந்தாது. நமது மடங்கள் உடைமைகள் அமைப்பு உடையன. இவ்வுடைமைகள் நடமாடும் கோயில்களைப் பேணவே அமைந்தன. இந்தப் பணி நடைமுறைக்கு வந்திருந்தால் மடங்களின் பெருமை உயர்ந்திருக்கும். இன்று அவை அப்பட்டமான ஒரு சுரண்டும் வர்க்கமாக அமைந்திருப்பது வருந்தத்தக்கது. 344. 345. மற்றும் தொடர்ப்பாடு எவண்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்குக் கருவியாகிய உடம்பும் மிகையே. அங்ங்ணம் இருக்க வேறு தொடர்புகள் எதற்காக? உடம்பே மிகை என்றதால், உடம்பை இழித்துப் பேசுதல் நோக்கம் அல்ல. உடம்பை நோக்கத்துடன் கூடிய கருவியாகக் கருதாமல் அதனிடத்தில் அதிக அக்கறை காட்டி உழைக்காது பேணுதலாகிய குறிப்பிலேயே இயங்குதல் கூடாது என்பது குறிப்பு. 345, 346. யான் எனது என்னும் செறுக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 101