பக்கம்:திருக்குறள் உரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் “நான்' என்றும் 'எனது” என்றும் உரிமை கொண்டாடும் வாயில்கள் வழிவரும் செருக்கை அறுத்து நீக்கியோர் வானோர் பெறுதலுக்கும் அரிய வீட்டைப் பெறுவர். "நான்' 'எனது” என்ற செருக்கு இல்லாமல் இருப்பது நல்லது. ஒரோவழி இருந்தாலும், இவற்றை உடையோம் என்ற வழி செருக்கடையக்கூடாது. “நான்” “எனது' அற்ற இடமே திருவடி ஞானநிலை என்பது துணிபு,நான்” “எனது'என்ற உணர்வுகளால் இம்மையிலும் பயனில்லை. மறுமையிலும் பயனில்லை. 'நான்” “எனது' அறுத்தலைப் பயின்று கொள்ள ஒழுக்கமாக மேற்கொள்ள 'கூட்டுறவு' பயன்படும்."வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்றதால் தேவருலகம் விலக்கப் பெற்றது. “நான்'. தன்முனைப்பு. “எனது'- உடைமை வழி ஏற்படும் முனைப்பு. நான்','எனது உணர்வுகளைச்சாய்க்க எல்லாம் வல்ல இறைவன் செயல் என்ற கருத்தில் காலூன்ற வேண்டும். அல்லது நிறைநலம் மிக்க மக்களாட்சி-பொதுவுடைமைச்சமுதாயம் தோன்ற வேண்டும். 346. 347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. இருவகைப்பற்றுக்களையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பாரைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்ளும். பற்று துன்பங்களின் வாயிலே. 347. 348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். ஞான வழியில் தலைப்பட்டவர்கள் முற்றத் துறந்து விட்டனர். இங்ங்ணம் முற்றத் துறக்கத் தெரியாதவர்கள் மயக்கத்தின் பாற்பட்டு ஆசைவலைகளில் சிக்கிக் கொண்டவர்கள். ஒன்றினைப்பிறிதொன்றாகப்பிறழ எண்ணுதல்மயக்கம். ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துவளைத்துப்பிடித்தலால் "வலை" என்றார்.348. 349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். பற்றுகள் அறவேநீங்கியநிலையிலேயே பிறப்பைநீக்கலாம். பற்றும் அறாத நிலையில் நிலையாமையே காணப்படும். 102 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை