பக்கம்:திருக்குறள் உரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் “நிலையாமை காணப்படும்' என்றது ஆசையினால் பற்றுபவை அனைத்தும் தொடர்ச்சியாகப் பயன்தராதவை என்றுணர்த்த, ஆசைகள் உடையாரும் ஒன்றைத் துணிந்து நிலையாகப் பற்றி வாழமாட்டார்கள். 349. 350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. யாதொரு பற்றுமில்லாத இறைவனைப் பற்றுக, பற்றுக்களை விடுதலுக்கு உதவியாக இறைவனைப் பற்றுக. இறைவனைப் பற்றுதல், பற்றறுத்தலுக்காகவேயாதல் வேண்டும்: பிறவற்றை யாசித்துப் பெறுதலுக்காக இருத்தல் கூடாது என்பது கருத்து. 351. 36.மெயியுணர்தல் மெய்யுணர்தல் உண்மை உணர்தல். இங்கு மெய்- உண்மை என்பதுநிலையானது. துன்பக் கலப்பில்லாத இன்பம் எது என்று உணர்தல். பிறப்பின் காரணம்,நோக்கம், பயன் ஆகியன உணர்தல் என்றும் கூறலாம். மெய்யுணர்வு அறியும் வாழ்க்கை எப்போதும் பயன் தரும் சிறப்பான வாழ்க்கை. மெய்ம்மைக்கு- உண்மைக்கு மாறானவைகளைத் துறத்தல் என்பதால் துறவறவியலில் மெய்யுணர்தல் கூறப்பட்டது. 351. பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. உண்மையில் வாழ்க்கைக்குப் பயன்தரக்கூடியதல்லாத பொருள்களைப் பொருள் என்று உணரும் மயக்கத்தினால் இன்பந்தராத பிறப்பு உண்டு. தமிழ் வழக்கில் 'பொருள்” என்பது, நிலையான பயன்பாட்டுத் தகுதியுடையதையே குறிக்கும். 351. 352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. மயக்கம் நீங்கித் தெளிவு நிலையில் உண்மை கண்டவர்க்கு, அறியாமையாகிய இருள் நீங்கும்; இன்பமும் தரும். இருள் பொருள்களைக் காணாதவாறு செய்தல் போல, அறியாமை உண்மை உணர விடாமல் செய்யும். 352. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 103