பக்கம்:திருக்குறள் உரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பழக்கங்களின்றும் விடுதலை பெறமாட்டார்கள்.அதனால் ஊழ்வலிமையாகி விடுகிறது. நாளும் சிந்தித்துப் பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் இயல்பினருக்கு ஊழினை மாற்றும் ஆற்றல் இருக்கும். ஆனால் சென்ற கால மனித குல வரலாற்றில் ஊழின் ஆற்றல் மிகைப்படுத்தப்பெற்று மனிதர்கள் ஊழிற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். காலப்போக்கில் இந்த ஊழின் தததுவத்தைப் பயன்படுத்திச் கரண்டும் வர்க்கமும், இந்த வர்க்கத்திற்குத் துணைபோகும் சமய போதகர்களும் கொழுத்து வளர்ந்துள்ளனர். மக்களிடையில் அறியாமையும் வறுமையும் வளர்ந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் ஊழினை நம்பாக் கொள்கை தோன்றியது. ஊழ் உண்டு; அது புறத்தது அல்ல; அது மனிதரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆற்றல் அல்ல; மனிதரின் எண்ணங்களும் செயல்களும் பழக்கங்களுமே ஊழாகின்றன. நாள்தோறும் தன்னுடைய வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கித் தவறுகளைத் திருத்திக் கொண்டு வாழும் இயல்பினருக்கு ஊழ் உறுதுணை செய்யும். 371. ஆகுஉஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. நல்லூழால் முயற்சி தோன்றும். கையில் உள்ள பொருளை இழத்தற்குரிய தீயூழால் சோம்பல் தோன்றும். தோன்றும் - காணப்படும்; விளங்கித் தோன்றும் என்றும் பொருள் கொள்ளலாம். இங்ங்ணம் பொருள் கொண்டால் ஒருவரிடத்தில் உள்ள முயற்சி நல்லுழையும் சோம்பல் தீயூழையும் காட்டும் என்றும் கொள்ளலாம். இதுவே அறிவியலுக்கு இசைந்த கருத்து. 371. 372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. ஒருவன் தன் செல்வத்தை இழத்தற்குரிய தீயூழ் வந்துற்றபோது அவனைப் பேதையாக்கும். அவனுக்குச் செல்வம் சேர்தற்கேற்ற நல்லூழ் வந்துற்றபோது அவன் இயல்பில் பேதையாயிருந்தாலும் அறிஞனாக்கும். அறிவு என்பது நாள்தோறும் பெறுவது பேணி வளர்க்கப் பெறுவது; செயல்வழி அனைத்திலும் வாழ்க்கையில் நாள்தோறும் பெறும் அனுபவங்கள் பட்டறிவாக வளர்கின்றன. இத்தகு அறிவுப் பயன்பாட்டினை அடையாமல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 109