பக்கம்:திருக்குறள் உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். வேண்டிய துன்பங்களை அடைவிக்காது தீயூழ் நீங்குமாயின், வறுமையின் காரணமாக நுகர்ச்சி இல்லாதார் துறப்பர். வறுமையின்வழித் துறத்தல் இயற்கையிலமைந்த துறவன்று. 378, 379.நன்றுஆம்கால்நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால் அல்லல் படுவது எனின். நல்லன விளையும் பொழுது நல்லன என்று ஒதுக்காது அனுபவிப்பவர்கள், தீயன விளையும்பொழுது அங்ங்ணமே அனுபவிக்காது அல்லற்படுவது ஏன்? - ஒருவன், தன்னுடைய செயல்களின்வழி நன்மையை அடைய விரும்புகின்றனன். அங்ங்னமே தீமையை விரும்பாதது ஏன்? தாம் செய்த செயல்களின் நண்மையை நுகர்வது போலவே தீமையை நுகர்தல் கடமையன்றோ! - 379 380. ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும். ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழினை விலக்குதற்கு வேறு ஒரு வழியை ஆய்ந்து எண்ணினும் ஆங்கு அவ்வழியிலும் முற்பட்டு வந்து நிற்கும். “முந்துறும்’ என்றதனால் ஊழிற்கு வெற்றி கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப் பெறவில்லை. 380. (அறத்துப் பால் மூலமும் உரையும் முற்றும்)

  • * * 옷

廿2 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை