பக்கம்:திருக்குறள் உரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் இங்குக் கல்வி என்று பொதுவாகக் குறிப்பிட்டிருந்தாலும் அரசியல் ஞானம் பெறுவதற்குரிய சிறப்புடைக் கல்வி என்று அறிக. உலகியல் கல்வி - அறிவு இன்மை, விரைந்து செய்யாமை ஆகிய காரணங்களால் தோற்றவர்களை விட, துணிந்து செய்யாமையால் தோற்றவர்களே மிகுதி. வெற்றி பொருந்திய ஆட்சிக்குத் துணிவு இன்றியமையாதது. இன்று மக்களிடத்தில் நிலவும் ஆக்கத்திற்கு எதிரான ஆசாபாசங்களை எதிர்க்கும் துணிவு அருகி இருப்பதே நாட்டின் சிக்கல்களுக்குக் காரணம். 383. 384, அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடைய தரசு. அறநெறி பிறழாது அறமல்லாதனவற்றை நீக்கி வீரத்திலும் குறைவில்லாதுமானமுடையதாக விளங்குவது அரசு. இங்கு "அறம்' என்று குறிப்பிடப் பெறுவது சமுதாய நியதியின் பொது அறங்களாகும். அல்லவை நீக்கி என்றதால் அறம் அல்லாதன அரசின் ஆட்சியிலும், குடிமக்கள் வாழ்வியலிலும் நிகழாவண்ணம் நீக்கி என்பது பொருள். அரசுக்கு மானமாவது, அறநெறிபிறழாமை, முறை கோடாமை, தன் நாட்டு மக்களுக்கு வாழ்வளித்தல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பெருமை என்பர். 384. 385. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. ஆட்சியியலுக்குரிய பொருள்வாயில்களை உருவாக்கலும், பொருளை ஈட்டுதலும் ஈட்டிய பொருளை மூலதனமாகும்வரை தொகுத்துக் காத்தலும், அங்ங்ணம் காத்த மூலதனத்தை மக்களுக்குப் பயன்படும் வழியில் வகுத்துச் செலவிடுதலும் தெரிந்து செய்யக்கூடிய வன்மையுடையதே அரசு. இயற்றலும் என்றதாவது - அரசுக்குப் பொருள் தேவை. அரசின் தேவை வளர்தல் தவிர்க்க இயலாதது. ஆதலால் மக்களிடமிருந்து வரும் வரி முதலியவற்றை மட்டுமே பொருள் வருவதற்குரிய வாயில் என்று அரசு நம்பியிராமல் புதியவாயில்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கருத்து. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 115