பக்கம்:திருக்குறள் உரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அரசன் தன்னிடம் முறையிடவும், குறையிரந்து கூறவும் மக்கள் வரும்பொழுது பரிவாரங்களுடன்படாடோபமாக இருந்தால் சூழ்நிலை அச்சத்தால் உள்ளதைச் சொல்லாமல் போய்விடுவர். ஆதலால், மக்களைக் காணும்பொழுது எளிய தோற்றமும் எளிமையான சூழ்நிலையும் தேவை. நாட்டையாள்பவர் எந்தச் சூழ்நிலையிலும் யார்மாட்டும் கடுஞ்சொல் கூறலாகாது என்பது கருத்து. 386. 387.இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு. இனிய சொல்லுடன் மக்களுக்கு வேண்டினவற்றைக் கொடுத்து அன்பாகக் காக்க வல்ல அரசனுக்கு, இவ்வுலகம் புகழையும் சேர்க்கும்; அந்த அரசன் கருதியவாறும் உலகம் அமையும். இன்சொல் என்று கூறியது சொல்லின் அளவில் மட்டுமன்று. எத்தனையோ பேர் இனிய சொற்களைக் கொட்டி அளந்து விடுவர். ஆனால், பயனைத்தான் காண முடியாது. திருக்குறள் கூறும் இன்சொல் என்பது சொல், சொல்லினைக் கூறும் குரல் அழுத்தம், சொல்லினால் உணர்த்தப் பெறும் பொருள், சொல்லினால் விளையும் விளைவு ஆகிய அனைத்தையும் தழுவியதேயாம். அரசற்கு ஈதல் என்பது ஒரோவழி உடனடித்தேவைக்குப்பொருள் ஈதல் என்று அமையும். ஆனால், அரசு ஈதல் என்றால் உரிய வேலை வாய்ப்பு, நலத்திட்டங்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். அரசுத்துறையில் ஈதல் நிலையாக அமைதல் வேண்டும். 387. 388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். நடுநிலை உணர்வில் முடிவுகள் எடுத்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்களுக்குக் கடவுள் என்றே கருதப்படுவான். முறை செய்தலாவது: 1. உரிமையியல், குற்றவியல் வழக்குகளில் நடுநிலையில் தீர்ப்பு வழங்குதல். 2. கல்வி, பொருள் செய்தல், மருத்துவம் ஆகிய அனைத்துத் துறையிலும் சம வாய்ப்பளித்தல். 3. நாட்டின் பொருளை அனைவர்க்கும் அவரவர்தம் உழைப்புக்கேற்பப் பகிர்ந்து அளித்தல். “இறையென்று வைக்கப்படும்' , 'இறையென்று' என்பதால் அவன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை is?