பக்கம்:திருக்குறள் உரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் கண்ணுடையார் என்று சொல்லப்படுபவர் கற்றவரே. கல்லாதவர், முகத்திரண்டு புண்கள் உடையவர், கண்ணில்லாதவர். உலகியலில் காட்சிக்குப்படும் பொருள்களையும், அவை வாழ்விற்குப் பயன்படுமாற்றையும் கூர்ந்தறிந்து பயன்படுத்தத் துணை செய்வது கல்வி என்பதனால் கண் என்றார். கல்வியில்லாதவர், பொருள்களின் தன்மையறியாமையினால் முறைபிறழக் கண்டும் முறை பிறழ நுகர்ந்தும் அல்லற்படுவதால் அவர்களுடைய கண்ணைப் “ புண் ' என்றார். இன்பத்திற்குப் பயன்படும் தன்மையைக் கல்லாதார் கண் இழந்து விடுவதால் “கண் அல்ல” என்றும், மாறாகத் துன்பத்தைத் தருவதால் 'புண்' என்றும் கூறினார். 393. 394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். எவர் ஒருவரும் அவர் மகிழுமாறு சென்று கூடி, பிரியுங்காலத்தில்’ கூடிப் பழகியவர்கள் கூடிப் பழகிய காலத்தில் பெற்ற கருத்துக்களின் சிறப்புகளை நினைந்து உள்ளத்தால் பிரிவது கற்றறிந்த அறிவுடையார் செயல். கற்ற அறிவு கொண்டுபுலன்களைச் செப்பம் செய்து, உயர் அன்போடு பழகுபவர் 'புலவர்”. புலன்களை உழுத நிலம் சான்றோர். புலவர் . உயர்ந்தோர் கூடி மகிழ்வர்; பிரிவினை விரும்பார். 394. 395. உடையார் முன் இல்லார்போல் ஏக்கங்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர். பொருளுடையார் முன்னே செல்வமில்லாதவர் நிற்குமாறு போலக் கல்விச் செல்வமுடையோர் முன்னே, ஏக்கத்தோடு தாழ்ந்து நின்று கல்வி கற்றவரே தலையாயவர். அங்ங்ணமின்றித் தாழ்ந்து நிற்றலுக்கு நாணிக் கல்லாதிருப்பவர் கடையர். பொருள் தேவையை இரந்தும் நிரப்பிக் கொள்ள விரும்பும் ஆர்வத்தைப் போலக் கல்வித் தேவையைப் பெறுவதற்கு யாரும் முனைவதில்லை. பொருளுக்கு இரந்து நிற்றல் தவறு. கல்விக்கு இரந்து நிற்றல் தவறன்று. 395. 396. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு. மணலின்கண் கேணி, தோண்டிய அளவிற்குத் தண்ணீர் ஊறும். அதுபோல மக்களுக்கு அறிவு, கற்ற அளவிற்கு ஊறும். 120 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை