பக்கம்:திருக்குறள் உரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் “தொட்டனைத் துறும் மணற்கேணி என்றதால் நிலத்தடி நீரை உணர்த்தியது. கிணறு தொடுதலுக்குப் பயன்படும் கருவி. பொருள்களில் தண்ணீர் இல்லை. அதுபோல, அறிவு என்பது இயல்பாகவே ஆன்மாவிடத்தில் உயிரினிடத்தில் உண்டு. ஒருவன், தன்னிடத்தில் அமைந்துள்ள அறிவுப் புலனை, கற்பதன் மூலம் வளர்த்துக் கொள்கிறான். 396. 397. யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. கற்றவனுக்குப் பிற நாடும், பிற ஊரும் தன்நாடாம்; தன் ஊராம். அங்ங்ணம் இருந்தும்கூட சாகிற வரையில் கற்காது காலத்தைக் கழிப்பது ஏன்? 'யாதானும் நாடாமால் ஊராமால்' என்றதால் தாம் சென்று வாழும் நாட்டையும் ஊரையும் தமது நாடாகவும் ஊராவும் ஆக்கிக் கொள்ளும் திறனுடைய கல்வி என்று பொருள் கொள்ளுதல் சிறப்பு. இத்தகு சிறப்புப் பெற்ற ஆங்கிலேயர் (இங்கிலாந்து மக்கள்) அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் குடியேறி அந்தந்த நாட்டைத் தங்கள் நாடாக்கிக் கொண்டு இனிதே வாழ்கின்றனர். ஆனால் திருவள் ளுவத்தைப்பெற்ற தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்படுகின்றனர் ஏன்? இந்தக் குறள்நெறி தமிழர்தம் வாழ்வாக மாறாததுதான் காரணம். 397. 398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒருவனுக்கு, ஒரு பிறப்பில் கற்ற கல்வி, ஏழு பிறப்பிலும் சென்று உதவி, பெருமையைத் தரும். கல்வியின் பயன் தொடர்ந்து கிடைக்கும். கல்வியின் பயனைத் தடை செய்யும் ஆற்றல் மரணத்திற்குக்கூட இல்லை. எழுபிறப்பும் தொடர்ந்து துணை செய்யும். 398. 399. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். சிறந்த நூல்களைக் கற்று அதனால் இன்பத்தை அனுபவிக்கிறவர்கள் அதேபோல அந்தக் கல்வியினாலாய இன்பத்தை உலகத்தவர்கள் அனுபவித்து இன்புற வேண்டும் என்று விரும்புவார்கள். கல்வியினாலாய இன்பம் தற்சார்புடையதாக இருக்காது. பிறர் சார்புடையதாக விளங்கும். இந்த அடிப்படையிலேயே, இலக்கியங்கள், சொற்பொழிவுகள் முதலியன தோன்றின. 399. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை - 121