பக்கம்:திருக்குறள் உரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 400. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாம். மற்றவை செல்வங்கள் அல்ல. அழியாது இருப்பதாலும் பிறவிதோறும் தொடர்வதாலும் களவு முதலியனவற்றிற்கு உட்படாததாலும் பிறருக்கு வழங்கக் குறைவுபடாததாலும் “கேடில் விழுச் செல்வம்' என்றார். கல்வி, கற்றாரை உயர்த்துவதால் 'விழுச்செல்வம்' என்றார். இத்தகு சிறப்புக்கள் மற்ற பொருள்' முதலியவற்றிற்கு இல்லாமையால் அவை, “செல்வம்' அல்ல என்றார். 400. 41.கல்லாமை கல்லாமை என்ற இந்த அதிகாரத்தில் கல்விகற்காமையால்விளையக் கூடிய தீமை எடுத்துக் கூறப்பெறுகிறது. கல்வி என்ற அதிகாரத்தில் கல்வியின் தேவையை உடன்பாட்டில் எடுத்துக்கூறிய திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் கல்வி இன்மையால் வரும் தீமையை எதிர்மறை முகத்தால் கூறுகிறார். கல்வியின் அவசியத்தை இருவகையாகவும் உணர்த்தியதாயிற்று. 401. அரங்குஇன்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். வட்டாட்டம் ஆடுதற்குரிய அரங்கம் இல்லாது வட்டு ஆடுதல் இயலாத ஒன்று. அதுபோலவே, நிறைந்த நூல்களை ஒருவன் கற்காது, கற்றறியாத செய்திகளின் விவாதங்களில் ஈடுபடுதல் இயலாத ஒன்று. 401, 402. கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. கல்வியில்லாத ஒருவன் அவையின் முன் சொல்ல விரும்புதல் முலையிரண்டும் இல்லாத பெண், பெண் தன்மைக்குரிய காமத்தை விரும்புவதை ஒத்தது. 402. 403. கல்லா தவரும் நனிநல்லார் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின். தம் அறிவின் தகுதியின்மையை உணர்ந்து, கற்றோர் அவையில் சொல்லாது அடக்கமாயிருப்பராயின் கல்லாதவரும் மிக நல்லவரேயாவர். கல்லாதவரின் சொல், பெருந்துள்பத்தைத் தருமாதலால் சொல்லாதிருத்தலே நன்று என்றார். 403 122 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை