பக்கம்:திருக்குறள் உரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 404. கல்லாதான் ஓட்டம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடை யார். கல்லாத ஒருவனின் உயரிய கருத்து, மிகச் சிறந்ததாயினும் அறிவுடையார் அக்கருத்தினை ஏற்றுக் கொள்ளார். இயற்கையாக ஒரோவழி வெளிப்படும் கருத்து நுட்பம் கல்வியின்வழி வாராமையால் உறுதியும் பயன்படும் இருக்காது என்பது கருத்து. 404. 405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். நூல்களைக் கற்காத ஒருவன், அறிவுடையவனாகத் தன்னை மதித்துக் கொள்ளுதல் கற்றவர்களோடு உரையாடும் பொழுது சோர்வுபட்டு அவன் கல்லாமை வெளிப்படும். ஒன்றை உணர்த்த ஒன்றைச் சொல்லி அதனை உறுதிப்படுத்த வேறொன்றைச் சொல்ல முடியாததாலோ சொல்லப்பட்ட செய்திக்கு எதிராக ஒரு வினாத் தொடுப்பின் விடை சொல்ல முடியாது திகைத்தலாலோ சோர்வு படும் என்றார். 405. 406. உளர்.என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அணையர் கல்லா தவர். கல்லாதவர் உடம்போடு உள்ளர் என்று சொல்லும் அளவினராதலன்றி பிறர்க்குப் பயன்படாமையால் களர் நிலம் ஒத்தவராவர். களர்நிலத்தில் ஒன்றும் விளையாது. அதுபோல், கல்லாதவர் வாழ்க்கையில் ஒருபயனும் விளையாது. இன்று வேளாண்மை வளர்ச்சியில் களர் நிலத்தை நன்னிலமாக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களர் நிலத்தில் தண்ணீரைக் கட்டி ஜிப்சம் என்ற உப்பைக் களரின் அளவுக்கேற்றவாறு கலக்கி மூன்று நாட்கள் நிறுத்தி வைத்துத் தண்ணீரை வடிய விட்டால் களர் போய்விடும். களர் நிலத்திலேயே விளையக்கூடிய ஒட்டுக்கால்' என்ற நெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லாதவரும் கற்றாரோடு உறவு கொண்டு கலந்துரையாடல் மூலம் கல்வியின்மையால் வரும் தீமையை மாற்றிக் கொண்டு பயனுடைய வாழ்க்கை வாழலாம் என்பது கருத்து. 406. 407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. நுண்ணியதாயும் மாட்சிமைப்பட்டதாயும் உள்ள பல நூல்களையும் நுணுகிக் கற்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும் மண்ணினால் மாட்சிமைப்படப் புனைந்தமைத்த பாவையின் எழுச்சியும் அழகும் பேன்றது. நுண்மானன் நுழைபுலம் இல்லாதார் வேண்டிய பொழுது வேண்டியன எடுத்துச் சொல்லும் உயிர்ப்பாற்றல் இல்லாதிருப்பர். பாவையைப் போல என்பது கருதது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 123 .