பக்கம்:திருக்குறள் உரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 413. செவிஉணவில் கேள்வி யுடையார் அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. செவியறிவாகிய கேள்வியுடையார் வேள்வி உணவு கொள்ளும் விண்ணுலகில் உள்ள தேவரை ஒப்பர். 'அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர்” என்றது உலக வழக்கினை யொட்டிக் கூறியது. 413. 44. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. நல்ல நூல்களைக் கற்காவிடினும் அவற்றைக் கற்றாரிடம் கேட்டறிக. அக்கேள்வியறிவு தளர்ச்சி வந்துள்ள பொழுது துணையாக அமையும். கற்றற்குப் பொருள் செலவு, மிகுதி காபமும் மிகத் தேவை. அவை கிடைக்காத சூழ்நிலையில் கற்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும் கவலற்க. நல்ல நூல்களைக் கற்றவரிடம் கேட்டறிவதன் மூலம் கற்காததினால் நேர்ந்த இழப்பை ஈடுசெய்யலாம். அதுமட்டுமல்ல, சிறந்தும் விளங்கலாம் என்பதாகும். ஆக, கல்வி வாயிலாகவோ, கேள்வி வாயிலாகவோ அறிவுச் செல்வத்தைப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கொள்க. 414. 415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். ஒழுக்கம் உடைய பெரியோர் வாய்ச் சொற்கள், வழுக்கும் நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுவது போல் - வாழ்க்கையில் வழுக்கல்கள் ஏற்படும்பொழுது உதவும். வழுக்கல் நிலத்தில் வழுக்கி வீழ்ந்துவிடாமல் நடந்து செல்ல ஊன்றுகோல் உதவுகிறது. அதுபோல, வழுக்கல்கள் ஏற்படக்கூடிய வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்து விடாமல், செம்மாந்த நிலையில் வாழ்ந்திட ஒழுக்கமுடையோர் வாய்ச்சொற்கள் உதவும் என்றார். கற்ற அறிவை வாழ்க்கையில் பயன்படுத்தி வழுக்கல்களில் வீழ்ந்து விடாமல் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள் ஒழுக்கமுடையோராவர். அவர்கள் வாழ்க்கை வழுக்கல்களில் விழாமல் தப்பித்து வாழ்ந்தவர்கள். ஆதலால், அவர்கள் சொல்லும் சொற்கள் விழுக்கலில் விழாமல் நடத்தற்குரிய அறிவைத் தரும் என்று உணர்த்தியவாறு. 415. 416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். 126 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை