பக்கம்:திருக்குறள் உரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 427, அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர். அறிவுடையார் நடக்க வேண்டியதை அறிந்து செய்வர். அறிவில்லாதவர் அதனை அறிய ஆற்றலில்லாதவர். எதிர்வருங்காலத்தில் நடக்க வேண்டியவற்றை அறிந்து செய்தலே அறிவுடைமை. சென்ற காலத்திய நிகழ்வுகளைக் குறித்து மகிழ்வோ, துண்பமோ அடைதல் அறிவுடைமையல்ல. 427. 428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமை பேதைமையாம். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயல். போரினால் விளையும் துன்பத்திற்கு அஞ்சி, அறவழி மேற்கொள்வது அறிவுடைமை, போரினால் விளையும் இழப்புகள் - துன்பங்கள் பற்றிக் கவலைப்படாமல் துப்பாக்கி தூக்குவது அறிவிலார் தொழில். 428. 429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். எதிர்வரும் காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காத்துக்கொள்ளும் அறிவுடையோர்க்கு, அவர் அஞ்சிநடுங்கக்கூடிய துன்பம் யாதொன்றும் இல்லை. “அதிர வருவதோர் நோய்' என்றதால் துன்பம் வரலாம். அது எதிர்பார்த்து இருந்த ஒன்று. ஆதலால், தாக்காது என்பது கருத்து. 429 430. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். அறிவு உடையார் எல்லாம் உடையார். அறிவு இல்லாதவர் பிறவெல்லாம் பெற்றிருந்தாலும் ஒன்றும் பெறாதவரேயாவர். பொருள் முதலியன பயனுற, அறிவு தேவை என்பதறிக. 430. 44.குற்றங்கடிதல் - உயிரியல் வாழ்க்கையின் நோக்கம், குற்றங்களின்று விடுபெறுதல் நிறை நலம் பெறுதல். குற்றங்கள் நீங்கினாலேயே அறிவு வளரும், ஆளுமை 130 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை