பக்கம்:திருக்குறள் உரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் வளரும். குற்றங்கள் பொருந்திய வாழ்க்கை துன்பத்திற்கே காரணமாகும். ஆதலால், குற்றம் கடிதல் வாழ்க்கையின் நோக்கங்களுள் ஒன்று. அதுவே வாழ்க்கையின் பயனுமாகும். குற்றங்கள் இருவகையின. ஒன்று, புலன்களில் உள்ள குற்றங்கள்; பிறிதொன்று புலன்களில் வளர்ந்த குற்றங்கள். அதாவது பொறிகள் வாயிலாக வெளிப்படும் குற்றங்கள். புலன்களில் தாக்கித் துன்பம் தரும் குற்றங்களாவன: அறியாமை, அழுக்காறு, ஆசை, வெஃகுதல், பகை பாராட்டல், அன்பின்மை, எழுச்சியின்மை, சோம்பல் முதலியன. பொறிகள் வாயிலாக வெளிப்படும் குற்றங்களாவன : புறம் பேசுதல், பயனில சொல் பாராட்டுதல், அடக்கமின்மை, செயலின்மை, களவு , வெகுளி, கொலை முதலியன. இக்குற்றங்கள் நீங்கினாலேயே தனி மனிதன் வாழ்வில் சிறப்புத் தோன்றும். வாழ்வாங்கு வாழ இயலும். கடிதல் என்றது, கண்ணோட்டமின்றி இக்குறைகளைக் கடிந்து ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தவேயாம். 431. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. தன்முனைப்பும் (அகங்காரமும்) வெகுளியும், சின்னத்தனங்களும் இல்லாதவரின் செல்வம் மேம்பாட்டுத் தன்மை உடையது. செருக்குடையார் மற்றவர்களை மதிக்கமாட்டார். அவ்வழி விரிந்த பரந்த அறிவும் கிடைக்காமல் போகும், சூழ்ந்து துணை செய்வாரும் இல்லாமல் போவர். சினம் - வெகுளி உறவினர்களை நண்பர்களைப் பிரிக்கும். ஆக்கமும் தராது. மாறாகக் கேடு பல தரும். “சிறுமை' - கழிகாமம் என்று கூறுவர். அதாவது தகுதி, தேவை இவைகளுக்குத் தொடர்பில்லாது காமுறுதல். இந்த இயல்பு கீழ்மக்களிடத்தில் இருத்தலால் சிறுமை என்று கூறப் பெற்றது என்பர். சிறுமை : சின்னத்தனம். மானிடத் தகுதிக்கேற்ப ஒழுகாது, சின்னத்தனத்துடன் உயர்வுடையாருக்கும் சிறுமை செய்து பழகுவது சிறுமையாகும். செருக்கு, சினம், சிறுமை ஆகியனஉயிர்நலம் கெடுப்பவை மட்டும் அல்ல; உடல்நலத்தையும் கெடுப்பவை; செல்வத்தையும் அழிப்பவை. 431. 432. இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. உலோபமும், மாண்பு இழத்தலைச் செய்யும் தவறான தன்மானமும், 9EIsiờph5 mớ\ịởớìuứ 9ịsiiGolĩợ5#(5# Giị missIII(5ử. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 131