பக்கம்:திருக்குறள் உரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் உலோபம் : செய்ய வேண்டியதைச் செய்யாமல் மிச்சப்படுத்துதல். உலோபம் - தரித்திரப் புத்தி. தவறான தன்மானமாவது நமக்கு உறுதுணையாயிருப்பவர்களிடம் இருக்கக்கூடியவர்களிடம் தன்மானம் பாராட்டி, இணங்கி விட்டுக் கொடுத்துப் போகாமல் ஒதுங்குதல்; உயர்த்திக் கொள்ளுதலாகும். அளவிறந்த மகிழ்ச்சியால் செய்ய வேண்டிய பணிகள் தடைப்படும். ஆதலால் அளவிறந்த மகிழ்ச்சி கூடாது. ஆள்வோர் அளவிறந்த மகிழ்ச்சி கொண்டால் ஆட்சியில் சேர்வர். ஆள்வோர் அளவிறந்த மகிழ்ச்சி கொள்ளும் சூழ்நிலையைத் தீயவர்கள் அறிந்து கொண்டால், அம்மகிழ்ச்சியை வாயிலாகக் கொண்டு பகை முடிப்பர். அதனால் தவிர்க்கவும் என்றார். 432. 433. தினைத்துணையாக் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். பழிக்கு அஞ்சுபவர்கள் தம்மிடம் தினையளவு குற்றம் வரினும் அதனைப் பனையளவு பெரிதெனக் கருதுவர். குற்றத்திற்குச்சிறியது-பெரியது என்ற வேறுபாடு இல்லாமல் பழிக்கு அஞ்சுபவர் நானுவர் என்பது கருத்து. இன்று பனைத்துணையளவு குற்றங்கள் கூட, தினையளவாகக் கருதப்பெறும் கீழ்மை வளர்ந்துள்ளது. 433. 434. குற்றமே காக்க பொருளாக குற்றமே அற்றம் தரூஉம் பகை. தனக்கு அழிவை உண்டாக்கும் பகை, தன்னிடமுள்ள குற்றமே. ஆதலால், தண்ணிடத்துக் குற்றம் வராமையைப் பொருளாகக் கொண்டு காககவும. யாரையும், பகை அழித்தலை விட அவரவர் குற்றமே அழித்து விடும் என்பது கருத்து. 434. 435. வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுண்னர் வைத்துறு போலக் கெடும். குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழததுை.அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர்போல அழிந்துவிடும். 435. 436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் எண்குற்ற மாகும் இறைக்கு. 132 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை