பக்கம்:திருக்குறள் உரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முன்பு, தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக் காண வல்லனாயின் அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது? ஒன்றுமில்லை. - இஃது ஒரு சிறந்த குறள். நாடாள்வோருக்குச் சொன்ன குறள். ஆள்வோரிடம் உள்ள குற்றங்களே மக்களிடம் குற்றங்களாக இடம் பெறுகின்றன. ஆதலால் மக்களிடமுள்ள குற்றங்களை நீக்கத் தண்டனை கொடுக்கும் அரசு அல்லது நீக்க முயலும் அரசு முதலில் மக்களிடம் குற்றம் தோன்றி வளர்வதற்குக் காரணமான, தம்மிடம் உள்ள குற்றங்களை நீக்கிக் கொள்வதால் ஆட்சி சீராக அமையும்; புகழ் வந்தமையும்; யாதொரு இழப்பும் இல்லை என்றவாறு. 436. 437. செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும். செய்ய வேண்டியவற்றைச் செய்யாது உலோபம் செய்தவனது செல்வம் பாதுகாப்பு இல்லாது கெடும். செல்வம் தேக்கத் தன்மையுடையதன்று அறம் செய்தல், துய்த்தல் ஆகிய செயற்பாட்டினை நோக்கியதே செல்வம். செல்வத்திற்குரிய செயற்பாடுகள், பெற்றசெல்வம் கொண்டு முதலீடு செய்து, மேலும் செய்தலாகிய பொருள் செயல் நிலை. உற்றார், உறவினர், வறியர் ஆகியோருக்குத் துய்ப்பன வழங்கி வாழ்வித்தல் அறச்செயல். தாம் துய்ப்பன துய்த்து முறையாக வாழ்தல் வாழ்நிலைச் செயல், கலையும், இசையும் வளர்த்து இன்புறுதல் இன்ப நிலைச் செயல். செல்வம் அழிதலாவது பயன்பாடு இல்லாமையால் அழிந்ததுபோலக் கருதுதல் என்று கொள்ளப் பெறும். செல்வம் பலவகையின. ஆதலால் களவு போதல், இயற்கைச் சூழலால் அழிதல் ஆகியனவும் எண்ணப்பட வேண்டும். ஒருவர் செல்வத்தின் பயனைத்துய்த்து மகிழாமலே - புகழ் பெறாமலே இறந்து போனாலும் அவரைப் பொறுத்தவரையில் செல்வம் அழிந்தது போலத்தானே! 437. 438. பற்றுள்ளம் என்னும் இவறண்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. செல்வத்திடம் உள்ள பற்றின் காரணமாகச் செய்யும் உலோபத்தனம் எந்தக் குற்றங்களுடனும் வைத்து எண்ணக் கூடிய சாதாரண குற்றமன்று. உலோபத்தனம் தனித்தன்மையுடைய குற்றம். வாழ்க்கையைப் பாழாக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 133