பக்கம்:திருக்குறள் உரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் குற்றங்களில் கஞ்சத்தனமும் ஒன்று அன்று அக்குற்றங்களிலும் மிக்குடையது கஞ்சத்தனம். கஞ்சத்தனம் பல நற்குணங்களைக் கெடுப்பதோடன்றிப் பல புதிய தீக்குணங்களையும் தோற்றுவித்து அழிவையே கொண்டு வந்து சேர்ப்பதால் கஞ்சத்தனத்தைத் தனிமைப்படுத்திக் கூறினார். 438. 439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. ஆள்வோர் தன்னைத்தானே மெச்சிக் கொள்ளாதிருக்கவும்,நன்மை தராத செயல்களை விரும்பாதிருக்கவும் வேண்டும்.அறிவு ஆற்றல் முதலியவற்றில் சிறந்து விளங்கினாலும் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொள்ளுதல் கூடாது. இஃது அரசருக்கு ஆள்வோருக்குரியதேனும் எல்லோருக்கும் உரியதேயாம். தம் அறிவு ஆற்றல் முதலியவற்றை வியந்து கொள்பவர்களுக்கு, மற்றவர்களிடம் உள்ளதை ஒப்பு நோக்கி அறிந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும். ஆதலால் தம்மை மெச்சிக் கொள்ளக் கூடாது. அதோடு தம்மைத் தாமே வியந்து கொள்ளும் நிலையால் மேலும் வளர்ச்சி அமையாது என்பதுவும் அறிக. தம்மைத்தாமே வியந்து கொள்பவர்கள் பெருமித உணர்வால் விழிப்பு நிலை இழந்து முற்காப்புச் செயலிழப்பர்.செயல்கள் என்றாலே நன்மை நோக்குடையன என்பது பொது விதி. தனக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்காத செயல்களை நினைத்தலும் செய்தலும் கூடாது. நன்மை தரும் செயல்களே வாழ்நிலையை நிர்ணயிக்கக் கூடியன என்பதறிக. 439. 440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். நாடாள்பவர் தம்முடைய விருப்பங்களை மற்றவர் அறியாமல் அனுபவித்தால் பகைவர்களின் சூழ்ச்சி பயனற்றுப் போகும். பகைவர், ஆள்வோரிடம் உள்ள பெருவிருப்பங்களை (பித்துப் பிடித்த நிலையினவற்றை) அறிந்து கொண்டால் அவைகளை வழங்கும் முயற்சியில் பகையும் முடிப்பர் என்பது வரலாற்று உண்மை. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் வீழ்ச்சியில் இக்குறள் கருத்தும் அமைந்தது என்பது உய்த்துணர்க. 440. 45. பெரியாரைத் துணைக்கோடல் யாரொருவரும் தனியே வாழ்ந்து வெற்றி பெறுதல் இயலாது; துணை வேண்டும். துணையைப் பெறுவது வாழ்க்கையில் முன்னேறுவதற்காம். அங்ங்ணமாயின் தம்மினும் வளர்ந்த பெரியோரையே 134 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை