பக்கம்:திருக்குறள் உரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் துணையாகக் கொள்ள வேண்டும். அறிவிலும் ஆள்வினைத் திறத்திலும் சீலத்திலும் உயர்ந்து விளங்கும் பெரியோர் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பெரியோர் துணை இன்றியமையாதது. பெரியோர்துணையும்அவர்தம் ஆய்வுரைகளும் விமர்சனங்களும் பல தவறுகள் நிகழாமல் தடுத்து விடும் என்பது அறிக. 441. அறன்.அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல். அறத்தின் இயல்பை அறிந்து மூத்து வளர்ந்த அறிவுடையோரது நட்பைத் தரம் அறிந்து ஆய்வு செய்து தழுவிக் கொள்க. 'மூத்த அறிவுடையோர்'- என்றது பட்டறிவு மிகுதியும் இருக்கும் என்ற அடிப்படையில். திறனறிந்து தேர்ந்து கொளல் என்றது, தமக்குப் பயன்படுமாறு அறிந்து கொள்க என்றவாறு. 441. 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். நேர்ந்த துன்பங்களை நீக்கி, அதே துன்பம் பிறிது வராமல் முற்காக்கும் தன்மையுடையோரைப் பேணிக்கொள்க. ‘'பேனிக் கொள்க’ என்றதால், அவர் மகிழ்வன செய்து கொள்க என்று உணர்த்தியது. 442. 443. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். அருமையானவற்றுள் எல்லாம் அருமையானது பெரியோரைச் சுற்றமாகக் கொள்ளுதல். அருமை கிடைத்தற்கரியது. நம்மில் பெரியோர் கிடைத்தலரிது.அதனால் அருமை என்றார். 443. 444. தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. தம்மைவிடப் பல்லாற்றானும் பெரியாராக இருப்பவர் தமக்குச் சுற்றத்தினராகும்படி அவர்தம் வழிநின்று ஒழுகுதல் வலிமைகளுள் எல்லாம் தலையாய வலிமையாகும். 444. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 135