பக்கம்:திருக்குறள் உரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முதற்பொருள் இல்லார்க்கு ஊதியம் ஆக்கம் இல்லை. அதுபோலத் தம்மைத் தாங்கிநிற்கக்கூடிய சார்புபெறாதவர்களின் ஆட்சியுரிமை நிலையாக அமையாது. முதல் போட்டுத் தொழில் செய்யும்பொழுது தம் உழைப்பிற்கேற்ப ஊதியம் பெறுதலே - எடுத்துக் கொள்ளுதலே முறை. அதனால் திருவள்ளுவர் ஊதியம் என்றார்.'ஊதியம்’ என்ற சொல்லுக்கு லாபம்’ என்று பொருள் கூறுவது பொருந்தாதது மட்டுமன்று, தவறு. 'லாபம்” பார்த்தல் பண்பட்ட பழககமலல. ஆட்சிப் பொறுப்பிற்குச் சோர்வுகள் வருவது தவிர்க்க இயலாதது இயற்கை. அங்ங்ணம் சோர்வு வரும்பொழுது தாங்கிப் பிடித்தல் வேண்டும். அங்ங்ணம் தாங்கிப் பிடிப்பவரே பெரியார். 449. 450. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். ஆட்சியாளர்கள் நல்லவர்களின் நட்பைக் கைவிடுதல் பலரோடு பகை கொள்ளுதலினும் பதின்மடங்கு துன்பத்தைத் தரும். நல்லார் தொடர்பு நீங்குவதால், அவர்கள் யாதொரு தீங்கும் செய்யார். ஆனால் அறிவு, ஆக்கம் பெறும் வாயில்கள் அடைபட்டுப் போதலால் துன்பம் வரும் என்றவாறு. . 450. -46. சிற்றினம் சேராமை ஒருவரோடு ஒருவர் சேர்தல் வாழ்க்கையில் உயர்நிலை பெறுதலுக்கேயாம், களித்து மகிழ்தலுக்காகவன்று. இதனால் களித்து மகிழ்தல் கூடாது என்று விளக்கியதாகக் கருதல் வேண்டா. பெரியோர் கூட்டினால் பக்தியில், இலக்கியச் சுவையில்,உயர்நிலை ஆய்வில்களித்தல் நிகழும். இஃது வரவேற்கத்தக்கது. அதனால், “பெரியோரைத்துணைக்கோடல்’ கூறினார். பெரியோர் துணை முயன்று பெறக் கூடியது என்பதனால் முதன்மை நிலையிலும் - கோடல் என்று கூறினார். பெரியோர்துணை இருந்தால் ஆக்கம். அடுத்து, சிற்றினம் சேராமை கூறுகிறார். “சிற்றினம்’ வலிந்த முயற்சிகளின்றியும் கிடைக்கக்கூடிய ஒன்று. சிற்றினத்தை விலக்கவே கடின முயற்சி தேவை. சிறியோர் யார்? பெரியோரல்லாதவர் சிறியோர் என்று கருதலாம். கள்குடியர், சூதாடிகள், வஞ்சகர், கொலைஞர், தன்னலக்காரர், புறந்துற்றுவோர், இச்சை மொழிகள் பேசிடுவோர், உண்மைகளை மறுப்போர், விதண்டாவாதம் செய்வோர், உழைக்காமல் உண்போர், கடமையைப் புறக்கணிப்போர், காலக்கொலை செய்வோர் என அடுக்கிக் கொண்டே போகலாம். சிறியாரோடு சேர்பவர்கள் தம் சிறப்புக்களை இழப்பர். அதோடு தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 137