பக்கம்:திருக்குறள் உரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இழிநிலைகளையும் அடைவர். அவர்களுக்குப் பெரியோர் துணையும் கிடைக்காது. ஒரோவழி இருந்தாலும் பயன் தராது. ஒருவருடைய ஒழுக்கமும் உயர்வுகளும் திறன்களும் அவருடைய சூழ்நிலையைப் பொறுத்தவை என்பது அவ்விரு அதிகாரங்களால் பெறப்படுகிறது. இந்தக் கருத்து மார்க்சியத்திற்கும் உண்டு. 451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். பெரியோர், சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர். சிறியோரே சிறியோர் கூட்டத்தைக் கண்டவுடன் சுற்றமாகத் தழுவிக் கொள்வர். பெரியோர் அஞ்சுவதற்குரியது சிற்றினம். சிற்றினம் அஞ்சுவதற்கும் அஞ்சாமையே மேற்கொள்ளும் என்பது கருத்து. 451. 452. நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு. தண்ணீரானது தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன் தன்மையிலிருந்து வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை அடையும். அதுபோலவே மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பினால் தன் தன்மை வேறுபட்டு அவ்வினத்தின் தன்மையதாக அமையும். சார்புகளால் மானிட வாழ்க்கை ஆக்கம் பெறும் அல்லது கெடும் என்பதறிக. 453. மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். மாந்தர்க்கு ஏற்படும் உணர்ச்சி மனத்தின் காரணமாக ஏற்படும். பிறரால் சுட்டிச் சொல்லப் பெறும் சொல், இனத்தால் உண்டாகும். மனம், உணர்ச்சியின் களமே தவிர,தன்மைகளுக்குரிய களமும் அன்று. கருவியும் அன்று. இம்மனத்தின் விடயங்களைத் தரும் புற உலகமே உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கிறது. புறநிலையில் மனம் பற்றும் சார்புகளைப் பொறுத்தே நல்லவன் - கெட்டவன் என்ற பெயர் என்பது கருத்து. 453, 454. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉள தாகும் அறிவு. ஒருவனுக்கு அவன் மனத்தின் கண்னேயுளதாவது போல் காட்சியளவில் பிறருக்குக் காண்பித்து-ஆனால், உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உண்டாவது அறிவு. - 138 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை