பக்கம்:திருக்குறள் உரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 458. மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. மனநலம் நல்ல வண்ணம் அமையப் பெற்றாராயினும் நல்லோர்க்கு இனநன்மை பாதுகாப்புத் தரும் தன்மையது. மனநலம் அமைந்த அளவிலேயே அமைதி பெறுதல் கூடாது. இனநலம் மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். 458. 459. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. மனநலத்தினால் மறுமை இன்பம் ஆகும். மனநலம் கருதியே சமய வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுகின்றன. 459, 460. நல்லினத்தி னுங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பது உம் இல், ஒருவனுக்கு நல்லினத்தினும் சிறந்த துணையில்லை. தீய இனத்தினும் மிகுதியாகத் துன்பம் தருவதும் இல்லை. நல்லினம் இன்பம் தரும். இன்பம் தராது போனாலும் கூட துன்பம் தராது. தீயின்பம் துன்பம் தருவதில் தலையாயது. ஆதலால் தீய இனச்சார்பை முற்றாக விலக்கி நல்லினத்தின் நட்பை நாடிப் பெறுக. 460. 47. தெரிந்து செயல்வகை செயற்படுவது என்பது அறிவார்ந்த ஒரு வாழ்க்கை முறை. எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, செய்யமுற்படும் செயல், அந்தச் செயலால் விளையக்கூடிய பயன்கள், எதிர்விளைவுகள், செய்து முடித்தற்கு வேண்டிய ஆற்றல், துணை முதலியன அனைத்தையும் ஆய்வு செய்து தெரிந்து முடிவு எடுத்துக் கொண்டு பின் செயற்படுதல் வேண்டும். 1. ஆய்வின் முதல்நிலை, செய்ய முனையும் செயல்கள் வரலாற்றுப் போக்கில் முன் நிகழ்ந்திருப்பின், அதன் விளைவுகளை ஆராய்தல். 2. செய்யப்புகும் செயல், இன்றைய சமுதாயத்தின் தேவைநிலை பற்றிய மதிப்பீடு. 3. தனதுநிலை, தனக்குத் துணையுறுப்புகளாக அமைந்துள்ளவை களின் நிலை. 4. தனது செயல் முனைப்புக்கு உதவ வேண்டியவர்களின் ஆற்றல், மனப்பாங்கு முதலியன ஆய்வுசெய்யப்பெறுதல் வேண்டும். அடுத்து, தனக்கு மூத்தோராக (கல்வி அறிவு, நுண்ணறிவு, பட்டறிவு ஆகியவற்றில் மூத்தோர்) 140 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை