பக்கம்:திருக்குறள் உரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் செயற்படும் முன் வழிதுறை காணும் முயற்சியில் பெறும் வருத்தம் பயன்தரும். அஃதன்றிச் செயல்பாட்டு நிலையில் தேர்ந்தெண்ணிச் செய்யாமையால் வரும் வருத்தங்களைப் பலர் கூடி வருந்தி முயன்றாலும் மாற்றலரிது. 468. 469. நன்றுஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை. செய்யப்படுபவர் குணமறிந்து காரியங்களைச் செய்யாததனால் நன்மை செய்வதிலும் தவறுண்டு. தண்டித்தல், மன்னித்தல், கொடுத்தல் முதலியவை செயலளவில் பயன்தரா. யாரை நோக்கிச் செய்யப்படுகின்றனவோ அவர்களின் பண்பாட்டிற்கு ஏற்றாற்போலத்தான் நன்மையோ, தீமையோ விளையும் ! 469. 470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. இகழ்ச்சி வராத காரியத்தை எண்ணிச் செய்ய வேண்டும். உலக வரலாற்று நியதிகளுடன் கலந்து செய்யாதாரை உலகு ஒத்துக் கொள்ளாது. - 470. 48. வலியறிதல் தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து செய்வன செய்தல் வெற்றி பெறுதலுக்குரிய வழி. வலியறியாமல் குன்று முட்டிய குருவி போலத் தோல்விகளைத் தழுவும் வாழ்க்கை விரும்பத் தக்கதன்று. 47. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். ஒருவன் தான் செய்யத் தொடங்கிய செயலின் வலிமையையும் அதனைச் செய்து முடிப்பதற்குரிய தன் வலிமையையும் அந்தச் செயலைச் செய்ய ஒட்டாது தடுக்கும் தன் எதிரியின் வலிமையையும் தனக்குத்துணையாய் அமைந்துள்ளார் வலிமையையும் தனது எதிரிக்குத் துணையாய் வருவார் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்து, தன் வலிமிக்குயர்ந்து இருப்பின்செய்ய நினைத்த செயலைச் செய்யத் தொடங்குக. மாற்றார் வலியினும் தன் வலிமை கூடுதலாக இருந்தால் செய்க என்றதால் ஒத்த வலிமை இருந்தாலும் செய்யற்க என்பது கருத்து. ஒத்த வலிமை, வெற்றியை மதில் மேல் பூனையாக்கும். 474. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 143