பக்கம்:திருக்குறள் உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பகைவர் வலியைத் தனித்தனியே அறியாமல் தொகுத்தறிதல் வேண்டும். 475. 476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி ஆகி விடும். ஒரு மரத்தின் உச்சிக்கிளையில் ஏறி நின்றவர் தமது ஊக்கத்தின் காரணமாக அதன் உச்சியைக் கடந்தும் ஏற முயல்வாவராயின் அம்முயற்சியால் அவர் உயிர்க்கு முடிவு நேர்ந்து விடும். பகைமேல் செல்லுங்கால் பகைவனை வெற்றிகொண்ட அளவோடு அமையாது பகைப்புலநாட்டை அழிக்கநினைத்து மேலும் தீமைகள் செய்யின் பகைவனும் அவனைச்சார்ந்தவர்களும் வெகுண்டு எழுந்து அழிப்பர் என்று பொருள் கொள்ளுதல் சிறப்பு. 476. 47. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. ஈதல் முதலிய அறப்பணிகளை இயற்றின், தம் பொருள் அளவை அறிந்து அதற்கு ஏற்ப வழங்குக. அதுவே செல்வத்தைப் பேணிக்காத்து வளர்க்கும் நெறி. - இந்நெறிக்கு மாறாகத் தம்மையே அழித்துக் கொண்டும் ஈதல் செய்க என்ற நெறி பிற்காலத்தது. இது வாழ்வியலுக்கு ஒத்துவராது. 477. 478. ஆகுஆறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை போகுஆறு அகலாக் கடை. பொருள் வரும் வாயில்கள் சிறியதேயானாலும் அப்பொருள் செல்லும் வாயில் அதிகமாகாதபொழுது கேடு வராது. வரவிற்குள் செலவு அடங்கிப் பொருள் மிஞ்சுதல் பொருள் போற்றும் நெறி. வரவும் செலவும் ஒத்திருப்பினும் கேடில்லை என்பது இத்திருக்குறள் கருதது. - ஏரிக்குத் தண்ணீர் வரும் வரத்துக்காலை விட செலவுக்குரிய மடை அகலமாயிருத்தல் கூடாது. 478, 479. அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். தன் செல்வத்தின் அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை பல்வகைப் பொருள்களும் உடைய வாழ்க்கை போலத் தோன்றிப் பின் இல்லாமல் போவதுடன் காலப்போக்கில் அப்பொய்த் தோற்றமும் இல்லாமல் போகும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 145