பக்கம்:திருக்குறள் உரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் எந்த ஒரு கேடும் தொடக்கத்தில் வெளிப்பட்டுத் தோன்றாது. ஆதலின் 'உள போல இல்லாகி'என்றார். 479. 480. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும். தன்னுடைய பொருள் அளவை அறிந்து அதற்கேற்ப ஏற்றுக் கொள்ளாதவனுடைய ஒப்புரவு ஒழுகல் வாழ்க்கையால், அவனுடைய செல்வத்தின் அளவு விரைந்து கெடும். ஒப்புரவேயானாலும் அளவறிந்து செய்யாதார் பொருள் கெடும். இத்திருக்குறள், - - ஒப்புரவினால் வருங்கே டெனின் அஃதொருவன் விற்றுக் கோள் தக்க துடைத்து. (220) என்ற திருக்குறள் கருத்தோடு முரண்படாதா எனில் முரண்பாடு இல்லை. ஒருவர் மேற்கொள்ள விரும்பும் ஒப்புரவுநெறிக்கு ஏற்பத் தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது வாழ்வியல் உண்மை.இந்த உண்மையை உணர்த்துவது இத்திருக்குறள் கருத்து. 480. 49.காலம் அறிதல் காலம் அறிதல் என்பதாவது காலத்தின் அருமையை அறிதல், செய்ய வேண்டிய பணிகளை அவற்றிற்குரிய காலத்தில் அறிந்து செய்தல். காலம் தவறிச் செய்யப்படும் எந்தப் பணியும் உரிய பயன்தராது. சில பணிகள் உரிய காலத்திற்கு முன்பே செய்யப்பெற்றாலும் பயன் தராது போதல் உண்டு. சில காரியங்கள் அவற்றிற்குரிய பருவ காலங்களில் மட்டுமே செய்யப் பெறும். உரிய காலத்தைத் தேர்ந்து செய்யப் பெறும் காரியமே முழுப்பயனைத் தரும். நட்பு பகை போன்றவற்றில்கூட உரிய காலம் அறிந்து ஒழுகினால் தான் பயன் கிடைக்கும். இரண்டாவது மகா யுத்தத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இட்லர் குளிர் காலத்தில் சோவியத் நாட்டின் மீது படையெடுத்து அவனுக்குத் தோல்வியைத் தந்தது. சோவியத்நாட்டின் குளிரைச் செருமானியப் படைகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காலம் அறிந்து போற்றுதல் என்பது காலந்தவறாமை எனும் ஒழுக்கத்தின் பாற்பட்டது. வாழ்க்கையை அளந்து பயன்பாடு கொள்வதற்குரிய கருவி காலமேயாம். காலத்தை வீணடிப்பது வாழ்க்கையையே பாழாக்கிவிடும். காலமறிந்து கடமைகளைச் செய்தல் வெற்றி பொருந்திய வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இந்த அதிகாரம் அரசியலில் இருப்பதால் அயலார் மேற்படையெடுத்துச் செல்ல உரியகாலத்தை அறிந்துசெல்லுதல் குறித்து ஒதப் பெற்றது என்று கருதுவது தவறன்று. ஆனால் காலமறிதல் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் தேவையான ஏற்பாடு, ஒழுக்கம் என்பதை மறத்தலாகாது. 146 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை