பக்கம்:திருக்குறள் உரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 481. பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. காக்கை தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண் தெரியாத பகற் பொழுதில் வென்றுவிடும். அதுபோல் பகைவரை எளிதில் வெற்றி கொள்ளக் கருதும் வேந்தர் பகைவரை வெற்றி கொள்ளுதற்குரிய பொழுதை அறிந்து போர் மேற்செல்ல வேண்டும். பகை மேற்செல்லுதற்குக் காலம் இரண்டு வகை: ஒன்று, தனக்கேற்ற சாதகமான காலம்; பிறிதொன்று பகையரசர்க்குப் பொருந்தாக் காலம். சாதகமான காலமாவது பருவம் சீராக இருத்தல், உணவுப் பொருள் முட்டின்றிக் கிடைத்தல், நாட்டில் கிடைத்தல் அமைதி முதலியன. பகையரசர்க்குப் பொருந்தாக் காலமாவது; பகையரசர் பொருதற் ' குரியதல்லாத பருவ காலம், பகை நாட்டிற் பஞ்சம், பகை நாட்டில் அமைதியின்மை ஆகியன என்று கொள்க. 481. 482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. காலத்தோடு பொருந்தச் செயல் செய்து ஒழுகுதல் நிலையில்லாத செல்வத்தையும் நீங்கா வண்ணங்கட்டி வைக்கும் கயிறாகும். காலத்தோடு பொருந்தச் செய்வதென்பது உரிய காலத்தில் உரிய பணிகளைச் செய்தல், பொதுவாகச் செல்வம் ஈட்டும் முயற்சிகளுக்குக் காலமறிந்து செய்யும் உணர்வு இன்றியமையாதது. “பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி உரிய காலத்தில் செய்யும் பணிகள் வெற்றியைத் தருவதால் செல்வம் நீங்காது என்று துணிவுடன் கூறினார். 482. 483. அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து கடமைகளைச்செய்வராயின் முடித்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவனவும் உள்ளனவோ? இல்லை! சிறந்த கருவியாவன: அமைச்சு, நட்பு, துாது ஆகிய உயர்திணையும், செயற்கருவிகளாகிய அஃறிணையும் ஆம். செய்யும் செயல் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும். 483. 484. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 147