பக்கம்:திருக்குறள் உரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் துணை செய்யாது. இன்னாதன கண்டு அகத்தே சினம் வைத்து வேர்க்காதொழியின் இன்னாதன இயல்பென்றாகிவிடும்.இதனால் இன்னாதனவற்றை இனியனவாகக் காணும் ஆற்றலும் அற்றுப் போகும். 487. 488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. தம்மினும் வலிய பகைவரைக்கான நேர்ந்தால் நற்காலம் வரும்வரை அவரைச் சுமந்திடுக. பகைவருக்கு முடிவுக் காலம் வரும்பொழுது தலைகீழாக விழுந்து மாய்வர். 488. 489, எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். தனக்கு வாய்த்தற்கரிய சமயம் வந்து சேரின் அப்போதே செய்தற்கு அரிய செயல்களைச் செய்து விடுக. சிறந்த செயற்பாட்டிற்குரிய காலம் வந்து அமைதல் அருமை. அதனால் 'எய்தற்கரியது இயைந்தக் கால்” என்றார். 489 490. கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்று.அதன் குத்துஒக்க சீர்த்த இடத்து. மீன் தேடும் கொக்குப்போல் ஒடுங்கி இருந்திடுக.ஆகும் காலம் வாய்த்த பொழுது கொக்கு விரைந்து மீனைக் கொத்துதல் போல் விரைந்து கடமையினைச் செய்திடுக. ஒடும் புனலில் உரிய மீன் வருமளவும் கொக்கு யாதொரு நோக்கமு மில்லாததுபோல் இருக்கும். அதுபோல உரிய காலம் வரை மற்றவர் ஐயுறா வண்ணம் காத்திருந்து கருதியன முடித்தல் வெற்றியைச் சேர்க்கும். 490. 50. இடனறிகல். யாதொரு காரியமும் நிகழ்வதற்குக் களமாக அமையும் இடத்தின் இயல்பினை அறிந்து தொடங்குதல் வேண்டும்.இடம் எடுத்த காரியத்திற்கு இசைந்ததாக இல்லாதிருப்பின் காரியம் கெடும். பொருளிழப்பு ஏற்படும். தோல்வியும் கிடைக்கும். ஆதலால் இடத்தின் இயல்பை அறிந்த பின்பே காரியங்களைத் தொடங்குதல் வேண்டும். 491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 149