பக்கம்:திருக்குறள் உரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இடத்தின் இயல்பினை முற்றும் காண்பதன் முன் எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. இடத்தினைப் பற்றி முற்றும் அறியத் தொடங்குதற்கு முன்பு, நிலத்தியல்பினை எள்ளிநகையாதொழிக. வினைக்குரிய களத்தின் இயல்பினை முற்றாக அறியாது எந்தச் செயலும் தொடங்கற்க. 491. 492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். மாறுபாடுகள் நிறைந்த வலியினை உடையார்க்கும் அரண் சார்புடைய ஆக்கம் பலவும் தரும். பொருளாக்கம் படைவலி முதலியன பற்றிய முரண்பாடுகள் அதாவது உடையார் இல்லார் என்ற நிலை இருப்பினும் அரண் சிறந்ததாக இருப்பின் ஆக்கம் வளரும். ஆதலால் படைவலி மட்டும் பார்க்காமல் அரண் வலிமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கருத்து. 492. 493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். வலிமை இல்லாதாரும் வலியராய் வெல்வர். இடமறிந்து தம்மையும் காத்துக் கொண்டு பகைவர் மாட்டுமேற் செயின் இயல்பான வலிமை இல்லையானாலும் நிற்கும் களத்தின் -இடத்தின் உதவியால் வெற்றி பெறலாம். 493. 494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். தாம் வினை செய்தலுக்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர் அரணைப் பொருந்தி நின்று செய்வாராயின் தம்மை வெற்றி கொள்ள எண்ணிய பகைவர் வெற்றி எண்ணத்தை இழப்பர். இடத்தொடு பொருந்திய வினைகளைச் செய்வாரை அவர் பகைவர் வெற்றி காண இயலாது என்பது கருத்து. 494. 495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. ஆழமுடைய நீரின் கண் முதலை வெல்லும், முதலை நீர் நிலை பிரிந்து நீங்கின்அதனை எல்லா உயிர்களும் வென்றுவிடும். நெடும்புன்லுள் முதலையை, மிக்க வலிம்ையுடைய யானையாலும் வெல்ல இயலாது. நீர் இல்லாத, இடத்தில் முதலையை மிகச் சாதாரணமான 150 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை