பக்கம்:திருக்குறள் உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் உயர்ந்த குடிப்பிறந்து, குற்றங்களினின்றும் நீங்கி, பழிக்கு அஞ்சி ஒழுகும் நானுடையாரையே ஆட்சியாளர்கள் தெளிந்து தெரிவு செய்யவேண்டும். 'குடிப்பிறத்தல்' வழிவழியாகச் சிறந்த குடியில் பிறத்தல் இயல்பாகவே சிறந்த குணங்களும் திறமையும் வந்தமையத் துணை செய்யும் என்பது வரலாற்றறிஞர்களின் துணிபு. 502. 503. அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. கற்பதற்குரிய அறநூல்கள் பலவற்றையும் கற்றுக் குற்றங்கள் அற்றவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்தால் அறியாமை முதலிய குற்றம் இல்லாமல் இருப்பது அரிது. அறிவு வளர வளர அறியாமை தென்படுதல் இயற்கை. ஆயினும் தேவைக்கேற்ற அறிவும் இன்றியமையாய் பண்புகளும் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் எண்பது கருத்து. முழுதும் அறிந்தவர்களையும் குற்றமே அற்றவர்களையும் காண்பதரிது என்பதறிக. 503. 504. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். ஒருவனிடத்தில் உள்ள குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து குணம் மிகுதியுமிருந்தால் எடுத்துக் கொள்க! குற்றம் மிகுதியாக இருந்தால் நீக்குக! குணம் நாடி-குற்றம் நாடி என்பதற்கு விளைவுகள் கருதியே கொள்ளல் வேண்டும். இது எண்ணிக்கையின்பாற்பட்டதுமட்டும் அன்று. 504. 505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ஒருவருடைய பெருமைக்கும் கீழ்மைக்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல். ஒவ்வொருவரும் வேறுபிறவற்றால் சிறப்புடையார் போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்களுடைய பெருமையை அல்லது கீழ்மையை எடுத்துக் காட்டுவது அவர்களுடைய செயல்களே என்பது கருத்து. 505. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 153