பக்கம்:திருக்குறள் உரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 506. அற்றாரைத் தேறுதல் ஒம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. கற்றம் முதலியன இல்லாதாரை வினைக்குரியராகத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்திடுக. அவர் பேணுதற்குரியாரும் பற்றுமிலாராதலின் பழிக்கு நானார். ஒருவர் நல்லவராய் இருத்தல் தமக்காக மட்டுமின்றித் தம்மைச் சார்ந்தார் வாழ-மகிழ என்பது கருத்து. யாதொரு பற்றும் இல்லாதாரை யார் பழிப்பர்; பழித்தால்தான் அவருக்கு என்ன ஆவது? “அற்றாரை'-குறிப்பிடத்தக்க எவ்வித நலனும் இல்லாதாரை என்றும் கொள்ளலாம். 506. 507. காதண்மை கந்தாஅறிவு அறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும். அறிய வேண்டுவன அறியாதாரை அன்பு, பாசம் இவற்றின் அடிப்படையில் வினைக்குரியராகத் தேர்ந்தெடுத்தல் நாடாள்வோருக்கு எல்லா அறியாமையையும் தரும். பாசம் ஒன்றின் காரணமாகத் துணையாயிருப்போரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. s 0勾. 508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். தண்னோடு தொடர்பற்ற ஒருவனை, ஆராயாது துணையமர்த்திக் கொண்டானாகில் அவனுக்கும் அவனது வழியினர்க்கும் கூடத் துன்பத்தைத் தரும். தன்னோடும், தன்குடியோடும் தொடர்பிலாத ஒருவரை, ஆராயாது துணையாயமர்த்திக் கொள்ளுதல் தண் குடி சார்ந்தார்க்கு அவரைப் புறக்கணித்ததால் வரும் துன்பம் தோன்றும் என்பது அறிக. 508. 509. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். யாரையும் தேர்ந்தால் அல்லது தெளிய வேண்டா. தேர்ந்து ஆராய்ந்து தெளிந்த பின்பு அவரையும் அவரிடம் வினைகளை ஒப்படைக்கவும் ஐயுறற்க. தெளிந்த பிறகும் ஐயுறவு கொண்டால் யாருமே துணையாக அமையார, 509. 154 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை