பக்கம்:திருக்குறள் உரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முடிக்க வல்லானையும் அல்லாது தண்பால் அன்பு கொண்டார் என்ற காரணத்திற்காகச் செயல்களில் ஈடுபடுத்தக் கூடாது. அன்பு மட்டுமே காரிய சாதனைக்கு பயன்படாது என்று கூறியது. 515. 516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். நாடாள்வோர் தமக்குரிய செயல்களைச் செய்வானின் தகுதி, திறமை, குண இயல்புகளை ஆராய்ந்தும் அவர் செய்யவிருக்கும் செயலின் இயல்பை ஆராய்ந்து அறிந்தும் பின் செய்வான் நிலையையும் செய்யும் தொழிலின் நிலையையும் செய்யும் காலச் சூழ்நிலையையும் ஒத்தினைத்துப் பார்த்தும் எல்லாவற்றிற்கும் இசைந்த நிலையில் அறிந்த ஒருவனைத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு செயல் செய்து முடிப்பதில் செயலின் தன்மை , செய்வோர் திறன்,செயற்பாடுறும் காலம் ஆகிய மூன்றும் சேர்ந்தாலே காரியம் வெற்றியாகும் என்பது கருத்து. 516. 517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல். நாடாள்வோர் இந்தக் காரியத்தை இந்தக்கருவிகளைக் கொண்டு இவன் முடிப்பான் என்று செய்து முடிப்பவனின் திறமையை ஆராய்ந்து முடிக்கக் கூடிய பணியினை விடுக. செயலும், செய்வார் திறனும், செய்து முடிப்பதற்குரிய கருவிகளாகிய இடம், பொருள், ஏவலர் முதலியனவற்றையும் கருத்திற் கொண்டு செயற்படுவோரிடம் பணிகளை ஒப்படைப்பது பயனுற முடித்தலுக்கு வழி என்று கூறியது. 517. 518. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குஉரிய னாகச் செயல். நாடாள்வோன் தமது செயல் செய்தலுக்குரியவன் ஒருவனைத் தேர்ந்து தெளிந்த பிறகு அவனை அந்தச் செயலுக்கு முற்றாக உரியவனாக்குக. ஒருவனை ஒருபணிக்கு என்று தேர்ந்தெடுத்த பிறகு அதில் தலையீடு இல்லாமல் அந்தப் பணியை அவன் தானே செய்து முடிக்கும் பொறுப்பினைத் தருதல். இன்று இந்தியாவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு கூடாது என்று கூறப்பெறுவது அறிக. - 5*8. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 157