பக்கம்:திருக்குறள் உரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் வெகுளி பகைவரைக் கொல்ல ஒரோவழி பயன்படும். ஆனால் மறதியினால் வரும் வினைச்சோர்வு தன்னையே கொல்வது என்பதால், வெகுளியினும் வினைச்சோர்வுதீது என்றார். அளவிறந்த சினத்தால் பலர் பகைவராவர்.மறதியால் வரும் பகைவரின் அளவு அதனினும் மிகுதி உடையதாகும். வெகுளியால் வரும் பகையிலும் மறதியால் வரும் பகைமை பெரிதும் துன்பம் செய்யும் . எப்படியெனில் மறதி என்று ஏற்றுக்கொள்ளது இகழப்பட்டதாகவும் அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் நன்றி மறந்ததாகவும் கருதப்பெற்று மிகவும் பழிக்கு ஆளாக நேரிடும். வெகுளி ஒரோவழி தோன்றுவது, மறதி வாழ்நாள் முழுதும் அனைத்துத் துறையிலும் ஊடுருவி இடர்ப்பாட்டினைச் செய்யும் . 531. 532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. நிலையான வறுமை அறிவைக் கெடுப்பது போல மறதி ஒருவருடைய புகழைக் கெடுக்கும் . நிலையான வறுமை கற்கும் வாய்ப்பைத் தடைசெய்துவிடுகிறது. வறுமையுடையாருக்குச் சமூக அங்கீகாரம் இன்மையால் கேட்பதற்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. வறுமை உடையோருக்குச் சமூக அங்கீகாரம் இன்மையால், கலந்துரையாடல் மூலமும் அறிவு வளர இயலாமல் போகிறது. மறவாது நன்றி பாராட்டுவதாலும், உறவினைப் பேணி வளர்ப்பதாலும், உதவி செய்வதாலும் புகழ் வளரும். மறதியால் - நினைவின்மையால் புகழ் கெடும் என்றார். 533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால்நுா லோர்க்கும் துணிவு. கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை. அது உலகத்தில் உள்ள எல்லா நூலோருக்கும் ஒப்பமுடிந்த முடிபாகும். முற்கூறிய கருத்தை மீண்டும் இன்றியமையாமை கருதி வலியுறுத்திக் கூறியது, மறதியின்மை - வினைச் சோர்வின்மை, வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் வெற்றி பொருந்திய வாழ்வுநடத்தத் தேவை என்பதால் எப்பால் நூலோர்க்கும் துணிபு’ என்றார். - மறதிக்காளாகி - வினைச் சோர்வுபடாமல் வாழ்வது உலகப் பொது நியதி என்றுணர்த்தியது. 533 534. அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்குஇல்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. உள்ளத்தில் அச்சமுடையார்க்கு அரண் இருந்தாலும் பயனில்லை. அதுபோல மறதி உடையார்க்கு எந்தச் செல்வம் இருந்தாலும் பயனில்லை. 162 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை