பக்கம்:திருக்குறள் உரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மறதி உடையர்க்கு எந்தச் செல்வம் இருந்தாலும் பயனில்லை 533. 535. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்ஊறு இரங்கி விடும். தன்னால் தடுக்கப்பட வேண்டிய துன்பங்களை அவை வரும் முன்பே அறிந்து தன்னைக் காவாது மறந்திருந்தவன், பின் துன்பம் வந்துற்ற பொழுது தடுக்க இயலாது போவதின் காரணமாக நினைந்து வருந்தி அழிவான். 535. 536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல். நாடாள்வோருக்கு எப்போதும் எவரிடத்திலும் எப்போதும் மறதியின்மை தப்பாது வாய்க்குமாயின் அதுபோன்ற நன்மை வேறு ஒன்றும் இல்லை. நாம் ஒருவரை மறவாமல் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது அவருக்கு மகிழ்வு தருவது. அதனால் விளையும் நன்மை பல என்றுணர்த்தியது. 536. 537. அரியளன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். செய்தற்கரியன என்று ஒன்று இல்லை, மனத்தில் மறவாது போற்றி என்ைனிச் செய்யின். நீங்காநினைவொடு எண்ணிச் செயல்படுவோர்க்கு ஆகாத காரியம் என்று ஒன்று இல்லை. 537. 538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் அல். நாடாள்வோருக்குச் சிற்ந்தவை என்று அறநூலோரும் சான்றோரும் உயர்த்திக் கூறிய செயல்களைக் கடைபிடித்துச் செய்தல் வேண்டும். இங்ங்ணம் விதிக்கப்பட்டவைகளைச் செய்யாது இகழ்ந்தார்க்கு மறந்தார்க்கு எழுமையும் நன்மை இல்லை. வினைச் சோர்வு இம்மை மட்டுமல்ல, எழு பிறப்பும் தொடரும் என்றுணர்த்தியது. 3 539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 163