பக்கம்:திருக்குறள் உரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் ஒருவர் மகிழச்சியில் மயங்கி இருக்கும்பொழுது முன்பு இத்தகைய மயக்கத்தால் வினைச் சோர்வு பட்டுக் கடமையைச் செய்யாததன் காரணமாகக் கெட்டுப் போனவர்களை நினைந்து கொள்க. வினைச் சோர்வு பட்டார் துன்புறுதல் மறுக்க இயலாத உண்மையாதலால் 'கெட்டார்” என்று உணர்த்தியவாறு. 539. 540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். நாடாள்வோர் தாம் கருதிய பொருளைத் தாம் கருதியவாறே எளிதில் பெறுதல் கூடும்,தாம் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக்கூடுமாயின் அடைய எண்ணிய ஒன்றை அடைகிறவரையில் மறவாது தொடர்ந்து வினைச் சோர்வு படாது உழைத்தால் எளிதில் அடைய முடியும் என்று உணர்த்தியவாறு, 540, 55. செங்கோனர் மை நேர்மையான ஆட்சி - வளைவில்லாத கோல் நேராக இருக்கும். யார் மாட்டும் எதற்காகவும் வளைந்து குறுகிய நலன்கள் தேடாது. மக்கள் நலனையே நேர்மையையே நாடிச் செய்யப்பெறும் ஆட்சி செங்கோன்மையாம். 541. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. யார் குற்றம் செய்தாலும் - குற்றம் செய்தார்மாட்டுக் கருணையின்றி நடுநிலையுணர்வுடன் குற்றத்தினையும் குற்றம் நிகழ்ந்த சூழ்நிலையினையும் அதற்குரிய தண்டத்தினையும் ஆராய்ந்து செய்வதே முறை. குற்றத்திற்குத் தண்டனையே தவிர, மனிதருக்கு அல்ல; இது இந்நூலின் சிறப்பு. மனிதரைப் பொருத்து குற்றத்திற்குத் தண்டனை மாறும் வழக்கை மறுத்தது. 541. 542. வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. வான் மழையை நம்பி உலகமெல்லாம் வாழும். அதுபோல, மன்னவன் செங்கோலை நம்பி குடிமக்கள் வாழ்வர். 164 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை