பக்கம்:திருக்குறள் உரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் உடல் பாதுகாப்புக்கு மழையும் உயிர் உடைமைப்பாதுகாப்புக்கு நல்லாட்சியும் தேவை. வானின் மழை, இயல்பாகக் கிடைப்பதுபோல அரசின் நீதியும் இயல்பாகக் கிடைத்தல் வேண்டும். வான்மழை பொய்ப்பின் வளம் கெடும். அரசு முறை பிறழின் மக்களின் வாழ்க்கை கெடும். 542. 543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். அந்தணர்கள் செய்யும் அறநூல்களுக்கும், அறத்திற்கும் முதற்காரணமாக நின்றது மன்னனுடைய நல்லாட்சியேயாம். அந்தணர் வாழ்தலும், நூல் செய்தலும், அறம் பயிலுதலும் நல்லாட்சியில் மட்டுமே நிகழ இயலும். 543. 544. குடிதழிஇக் கோல்ஒச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. குடிமக்களைத் தழுவி நல்லாட்சி நடத்தும் மன்னனின் அடி நிழலைத் தழுவி இந்த உலகம் நிற்கும். தழுவுதல் - பரிவுடன் பாதுகாத்தல் வேண்டுவன செய்தல். 'குடிதழிஇ என்றதால் மக்களின் நலனை முதன்மைப்படுத்தியது அறிக. 544, 545. இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. முறைப்படி நல்லாட்சி செய்யும் மன்னவனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளைவும் உள்ளனவாம். நல்லாட்சி-பருவமழை-நல்லவிளைவு. ஒன்றிற்கு ஒன்று இயற்கையாகவும் நடைமுறைச் செயல்களிலும் காரண-காரியங்களாகும். 545. 546. வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அது உம் கோடாது எனின். மன்னவனுக்கு வெற்றியைத் தருவது வேல் அன்று நீதிமுறை மாறாத ஆட்சியே வெற்றியைத் தரும். போரில் வேல் கொண்டு வெற்றிபெற, நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும். வேல் வெற்றியைத் தந்தாலும், நாட்டில் நல்லாட்சி இல்லாது போனால் அந்த வெற்றி பயனுடையதாகாது. 546. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 165