பக்கம்:திருக்குறள் உரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் இறைவன் திருவடியை அடைந்தவள், பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறுவர், சேராதார் நீந்தமாட்டாள். பெருங்கடல் நீந்திக் கரையேறுதற்கு அருமையானது. பிறவிக்குக் காரணமாகிய அறியாமைக் கடலை நீந்தும் இயல்பு இறைவனைச் சேர்தலால் கிடைக்கிறது. 10. 2 .வாண் சிறப்பு அறிவாக, ஆற்றலாக இருந்து உலகை இயக்கும் கடவுளை வாழ்த்திய பிறகு இந்த மண்ணகத்தை - மானுட வாழ்க்கையை வளப்படுத்தி வாழ்வளிக்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுவது வான்சிறப்பு. கடவுளை ஒப்ப, வான்மழை உலகை வாழ்வித்தலான கடவுள் வாழ்த்து அதிகாரத்தை அடுத்துக் கூறப்பெற்றது. வாழ்க்கையின் தொடக்கம் வான்மழையே. ஆதலால், வான் மழையின் சிறப்பு கூறப் பெற்றது. 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று. உயிரினத்தின் தொடர்ச்சியான வாழ்க்கை வாண்மழையால் நிகழ்வதால் வான்மழை அமிழ்தம் என்றுணர்க. உலகில் உயிரினங்களின் வாழ்க்கை இடையறவுபடாமல் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணமாக உள்ள மழை சாவாமல் தடுக்கும் அமிழ்தம் போன்றது. அமிழ்தம் - சாவா மருந்து. உலகத்திற்கு அழிவுகள் இல்லை; மாற்றங்கள் உண்டு பயன்படாத அளவுக்கு ஏற்படும் மாற்றங்கள் அழிவை ஒத்தவை. 11. 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. துய்த்து வாழ்பவருக்குத் துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தும், தானே துய்ப்புக்குரியதாகவும் அமைந்து விளங்குவது மழை. உணவுப்பொருள்கள் விளைய மழை உதவி செய்கிறது; பருகவும் பயன்படுகிறது. 12. 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்.உலகத்து உள்நின்று உடற்றும் பசி. 14 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை