பக்கம்:திருக்குறள் உரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முறை சேராது கொடுங்கோல் ஆட்சி நடைபெறும், நாட்டில் வாழும் மக்கள் துன்பத்தின் காரணமாகப் புரட்சி செய்து அரசையே மாற்றி அமைத்து விடுவர் எண்பது கருத்து. ஜார் மன்னனின் அரசு அகற்றப்பட்ட வரலாற்றை அறிக. 554. 555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண னிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. கொடுங்கோன்மை மிக்க அரசின்கண் அகப்பட்டுக் கொண்ட மக்கள் அல்லல் பொறாது அழுது வடிக்கும் கண்ணி அரசின் செல்வத்தை_அழிக்கும் படையாகும். நாட்டு மக்களை வறுமையில் உழல விட்டுவிட்டுச் சுகபோகத்தில் திளைக்கும் அரசுகள், மக்களின் துன்பத்தால் விழும் அல்லது மாற்றப்படும். அரசியல் புரட்சிகளை உருவாக்கும் ஆற்றல் ஏழைகள் அழுத கண்ணிருக்கு உண்டு என்பது கருத்து. 555. 556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. செங்கோல் முறையில் பொருந்தி நின்று ஆட்சி செய்யும் அரசிற்குப் புகழ் பொருந்தி நிற்கும். செங்கோல் முறைமை இல்லையெனில் அரசுகளுக்குப் புகழ் இல்லை. அரசுக்குப் புகழ் என்பது ஆளப்படும் மக்களின் மனநிறைவுடைய புகழ்ச் சொற்களேயாம். 556. 557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. மழை இல்லாமை வையகத்தில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தைத் தருமோ அவ்வகைத் துன்பத்தை அரசின் பேணுதலை இழந்த குடிமக்கள் பெறுவர். வளரும் பயிருக்கு வான்மழை. வளரும் குடிகளுக்கு நல்லரசு, 557. 558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின். முறை செய்யாத மன்னவனின் ஆட்சியில் வறியராய் வாழ்தலை விட பொருளுடையராக வாழ்தல் மிகுந்த துன்பத்தைத் தரும். கொடிய ஆட்சி செய்யும் அரசன் முறைகேடாகத் தமது வாழ்வுக்காகப் பொருளுடையாரை அச்சுறுத்திப் பொருள் சேர்ப்பன் என்பதால் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 169