பக்கம்:திருக்குறள் உரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் பாடுதலுக்குப் பொருத்தமில்லாத பண்ணினால் என்ன பயன்? அதுபோல் கண்ணோட்டம் இல்லாத கண்ணினால் என்ன பயன்? பண் இசைநல்லதே. ஆயினும் கருத்துள்ள LTL-6 ಡ್ವೇನೊ இசை இருந்தாலே பயன். எனவே “பண் என்னாம் பாடற்கியைபின்றேல் என்றார். கண்ணோட்டத்தின் செயற்பாடாகிய பரிவை வெளிக்காட்டுவது கண்ணேயாதலின, கண்ணோட்டமில்லாத கண் பயனற்றது என்று கூறினார். 573. 574. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். தகுந்த அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண் முகத்தில் உள்ளதுபோல் தோன்றுவதன்றி வேறொரு பயனும் தராது. 'கண்ணோட்டம் இல்லாத கண்கள் பயனற்றவை என்பது கருத்து. கண்ணோட்டமும் தேவையான அளவுக்கு வேண்டும் என்பதனை உணர்த்த "அளவினால்' என்றார். வாழ்விற்கு ஆக்கந்தராத குறைந்த அளவு கண்ணோட்டம் காட்டுதல் பயனற்றது. கண் அமைப்பின் நோக்கமே கண்ணோட்டம் என்று உணர்த்தியமை அறிக. 574, 575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். ஒருவனுடைய கண்ணிற்கு அழகு கண்ணோட்டம் காட்டுதல் , கண்ணோட்டம் இல்லாத கண் புண் என்று கருதப்படும். உடலின் மற்ற உறுப்புக்களுக்கு வேறு வகையால் அழகூட்டலாம். கண்ணிற்கு அழகு கண்ணோட்டம் காட்டுதலேயாம். கண்ணோட்டம் இலாதார் கண்கள்,காண்பவற்றின் மீது ஆசையுண்டாக்கி, அவ்வழித் துன்பம் தரும் ஆதலால் 'புண்' என்றார். 575, 576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர். - கண்களைப் பெற்றிருந்தும் கண்ணோடாத வன்நெஞ்சர் மண்ணோடு கலந்த மரம் போன்றவர்கள். “மண்ணோடு பொருந்திய” என்று பொருள் கொள்வதிலும் தவறில்லை. மண்ணோடு பொருந்திய மரம் வளரும். மண்ணோடு கலந்து ஒன்றாகிப் போன மரம் வளராது. மட்கிய மரத்தால் மக்கட்குப் பயனில்லை என்றாயிற்று. ஆனால், மண்ணோடு கலந்து மட்கிய மரம், மனிதருக்குப் பயன்படாது போனாலும் மண்ணுக்கு உரமாகி விடும். கண்ணோட்டம் இல்லாதவர் எந்த வகையான பயனும் இல்லாதவர் என்பதறிக. 576. 174 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை